என் மலர்
மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் மோட்டோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
- மோட்டோரோலா சிக்னேச்சர் முன்பு கீக்பெஞ்சில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
- இது அட்ரினோ 829 GPU உடன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. புதிய சாதனத்தின் வெளியீட்டு தேதியை நிறுவனம் அறிவித்து, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளியிட்டது. பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும் இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் பிளிப்கார்ட் மைக்ரோசைட் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ஃபிளாக்ஷிப்-கிரேடு செயல்திறனுடன் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட மேம்பட்ட கேமரா வன்பொருளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிரபல பென்ச்மார்க்கிங் தளத்திலும் தோன்றியது.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஜனவரி 7, 2026 அன்று இந்தியாவில் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சரில் உள்ள பின்புற பேனல் ஃபேப்ரிக் ஃபினிஷ் (துணி) கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே, சீரான, மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் ஸ்லாட் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளன. இடது புறத்தில் மற்றொரு பொத்தான் தோன்றும், இது கேமரா கண்ட்ரோல் பொத்தானாக இருக்கலாம் அல்லது AI அல்லது பிற செயல்பாடுகளை ஷாட்கட் மூலம் இயக்க செய்வதற்காக பயன்படுத்தப்படலாம்.
மோட்டோரோலா சிக்னேச்சர் முன்பு கீக்பெஞ்சில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒற்றை கோரில் 2,854 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனைகளில் 9,411 புள்ளிகளையும் பெற்றது. பட்டியல் 3.80GHz இல் இரண்டு கோர்கள் மற்றும் 3.32GHz இல் ஆறு கோர்கள் கொண்ட CPU இருப்பதாக காட்டியது.
இது அட்ரினோ 829 GPU உடன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படலாம். இது 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.






