என் மலர்
மொபைல்ஸ்

7,000mAh பேட்டரி, 200MP கேமரா... ரிலீசுக்கு ரெடியாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்..!
- ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.39,999 ஆகும்.
- கடந்த ஜனவரி 2025 இல் வெளியான ரியல்மி 14 ப்ரோ பிளஸ் விலை ரூ.29,999 இல் தொடங்கியது.
ரியல்மி நிறுவனம் வருகிற 6ஆம் தேதி இந்திய சந்தையில் ரியல்மி 16 ப்ரோ சீரிசை வெளியிட உள்ளது. அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, புதிய போன்களின் விலை குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. புதிய சீரிசில் இரண்டு மாடல்கள் இருக்கும், அதாவது ரியல்மி 16 ப்ரோ 5ஜி, ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி. இவை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
விலையை பொருத்தவரை ரியல்மி 16 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.31,999 என தொடங்கும். இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ.33,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,999 என்றும் நிர்ணயிக்கப்படுகிறது.
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.39,999 ஆகும். டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,999 ஆகும். டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,999 ஆகும்.
ஏற்கனவே விற்பனையில் உள்ள ரியல்மி 15 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.31,999 இல் தொடங்கி, அதிகபட்சமாக 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.38,999 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சீரிசில் ப்ரோ பிளஸ் மாடல் எதுவும் இல்லை. அதற்கு முன்பாக கடந்த ஜனவரி 2025 இல் வெளியான ரியல்மி 14 ப்ரோ பிளஸ் விலை ரூ.29,999 இல் தொடங்கியது.
காலப்போக்கில், ப்ரோ சீரிசின் தொடக்க விலை மாறாமல் உள்ளது, இருப்பினும் டாப் வேரியண்ட்களின் விலை அதிகரித்துள்ளது. இடையில் தற்போது மீண்டும், ப்ரோ பிளஸ் வேரியண்ட் வந்தவுடன், டாப் மாடல் விலை தற்போது ரூ.45,000-ஐ நெருங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 7,000mAh பேட்டரி மற்றும் 200MP பிரைமரி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும். ரியல்மி 16 ப்ரோ 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.
இந்த விலைகளில், ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஒன்பிளஸ் நார்டு 5 , iQOO நியோ 10 மற்றும் ஓப்போ F31 ப்ரோ பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும்.






