என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ChatGPT 5.3 Instant: அமெரிக்க அரசுடன் சர்ச்சை ஒப்பந்தத்துக்கு மத்தியில் புதிய Version-ஐ அறிமுகம் செய்த OpenAI
    X

    ChatGPT 5.3 Instant: அமெரிக்க அரசுடன் சர்ச்சை ஒப்பந்தத்துக்கு மத்தியில் புதிய Version-ஐ அறிமுகம் செய்த OpenAI

    • சர்ச்சை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து ஆந்த்ரோபிக் நிறுவனம் விலகிய நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஓபன்ஏஐ கைப்பற்றியது.
    • சாட்ஜிபிடி-யை பின்னுக்கு தள்ளி அதன் போட்டியாளரான Claude சாட்பாட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்), ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

    சாட்பாட்கள், வேலை என்பதையும் தாண்டி அன்றாட தேவையாகவே மாறும் சூழல் உருவாகி உள்ளது.

    அந்த வகையில் அந்தந்த நிறுவனங்கள் அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகின்றன.

    அந்த வகையில் ஓபன் ஏஐ நிறுவனம் தனது சாட்ஜிபிடி சாட்பாட் உடைய புதிய மாடலான ChatGPT 5.3 Instant பாதிப்பை அறிமுகம் செய்துள்ளது.

    பயனர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்த புகார்களை ஏற்று, சாட்ஜிபிடியின் பேச்சில் இருந்த சில செயற்கையான மற்றும் எரிச்சலூட்டும் (Cringe) விஷயங்களை ஓபன் ஏஐ குறைத்துள்ளது.

    முன்பு போல நீண்ட முன்னுரைகள் அல்லது தேவையற்ற அறிவுரைகள் இன்றி, கேட்கப்படும் கேள்விக்கு ChatGPT 5.3 Instant நேரடியாக பதிலளிக்கும்.

    புதிய மாடல் தவறான தகவல்களைத் தருவதை பெருமளவு குறைத்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்திப் பதிலளிக்கும்போது தவறுகள் 26.8% குறைந்துள்ளன. தனது சுய அறிவில் இருந்து பதிலளிக்கும்போது தவறுகள் 19.7% குறைந்துள்ளன.

    அதேநேரம் சாட்ஜிபிடியின் பதில்கள் எந்த தொனியில் இருக்க வேண்டும் என்ற Customization ஆப்ஷனும் இதில் உள்ளது.

    இதன்படி, சாட்ஜிபிடி உற்சாமாகவோ, கனிவாகவோ, நேரடியாகவோ பதில்களை வழங்கும்வகையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்க மாற்றிக் கொள்ளலாம்.

    உரையாடலின் போக்கில் திடீர் மாற்றங்கள் இன்றி, ஒரு சீரான தன்மையைப் பராமரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ChatGPT 5.3 வெளிவந்த அதே நேரத்தில், கூகுள் நிறுவனமும் தனது Gemini 3 மாடலை மேம்படுத்தியுள்ளது.

    சர்ச்சை ஒப்பந்தம்

    இதற்கிடையே அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனுடன் ஓபன் ஏஐ அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    முன்னதாக இந்த சர்ச்சை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து ஆந்த்ரோபிக் நிறுவனம் விலகிய நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஓபன்ஏஐ கைப்பற்றியது.

    இந்த ஒப்பந்தத்தின்படி ஏஐ-ஐ உள்நாட்டு உளவு வேலைகளுக்காக பயன்படுத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே தங்கள் தரவுகள் கண்காணிப்படும் என்ற கவலையால் பல பயனர்கள் சாட்ஜிபிடி சேவைகளை புறக்கணித்து வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை மட்டும் சாட்ஜிபிடி செயலியை Uninstall செய்தவர்களின் எண்ணிக்கை 295% அதிகரித்துள்ளது.

    அதேநேரம், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சாட்ஜிபிடி-யை பின்னுக்கு தள்ளி அதன் போட்டியாளரான அந்த்ரோபிக் உடைய Claude சாட்பாட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    Next Story
    ×