என் மலர்
நீங்கள் தேடியது "Smart glass"
- நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை.
- பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி.
பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களை இயக்கி வரும் நிறுவனம் மெட்டா. இதன் தலைமை செயல் அதிகாரியாக பேஸ்புக்-ஐ உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.
பயனர்களின் தரவுகளை உளவு பார்க்கும், திருடும் குற்றச்சாட்டுகளுக்கு மெட்டாவின் பேஸ்புக் பல முறை உள்ளாகி நீதிமன்ற விசாரணையையும் எதிர் கொண்டது.
மெட்டா சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி மெட்டா ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் இயங்கி வருகிறது.
அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் Ray Ban ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஒன்றாக உள்ளது.
எசிலார் லுக்சோட்டிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், 2025ல் மட்டும் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தும் பயனர்களின் அந்தரங்கக் காட்சிகள் கண்காணிக்கப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கென்யாவின் நைரோபியில் உள்ள Sama என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள், மெட்டா கண்ணாடிகள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து வகைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கண்ணாடியை அணிந்துகொண்டு இருக்கும் பயனர்கள் உடைகளைக் களைவது, கழிவறைக்குச் செல்வது மற்றும் உடலுறவு கொள்வது போன்ற மிக அந்தரங்கமான காட்சிகள் இந்தக் கண்ணாடிகள் மூலம் படமாக்கப்பட்டு, அந்த ஊழியர்களுக்கு அனுப்பப்படுவதாக ஸ்வீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில வீடியோக்களில் பயனர்களின் வங்கி அட்டைகள் தெளிவாகத் தெரிவதாகவும், இவை கசிந்தால் மிகப்பெரிய பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது.
"நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை. சிலர் இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டே உடலுறவு கொள்கிறார்கள்" என்று அந்த கென்ய நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஊழியர்கள் பிறரின் அந்தரங்கங்களை கண்காணிக்கும் வேலையை விரும்பவில்லை என்றாலும் வேறு வழியின்றி அதில் ஈடுபட்டுள்ளதாக கூறுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏஐ-ஐ மேம்படுத்த பயனர்களின் உரையாடல்கள் மற்றும் தரவுகள் தானியங்கி முறையிலோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ ஆய்வு செய்யப்படலாம் என்று மெட்டா நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்மார்ட் கிளாஸ் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருந்தது.
- தற்போது கேமரா, டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் மிஜியா ஸ்மார்ட் கண்ணாடி மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கண்ணாடி இண்டெலிஜண்ட் இமேஜ் மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயனர்களுக்கு கற்பனை திறனை வெளிப்படுத்த செய்கிறது. இது ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ் மற்றும் வழக்கமான கண்ணாடி கலந்த ஒற்றை சாதனம் ஆகும். இதில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது.
தோற்றத்தின் படி இந்த ஸ்மார்ட் கிளாஸ் அன்றாட பயன்பாடுக்கு ஏற்றதாக காட்சியளிக்கவில்லை. கண்ணாடியின் இரண்டு புறங்களிலும் ஏ.ஆர். ஆப்டிக்கல் டிஸ்ப்ளே மற்றும் கேமரா மாட்யுல் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன. லென்ஸ் மற்றும் ஃபிரேம்கள் இந்த கண்ணாடியின் முழு பயன்பாடுகளை அனுபவிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் மொத்த எடை 100 கிராம் ஆகும்.

சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் அம்சங்கள்:
- சோனி மைக்ரோ OLED சிலிகான் சார்ந்த டிஸ்ப்ளே
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- ஆண்டி-புளூ லைட் சான்று
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
- 3ஜிபி ரேம்
- 32ஜிபி மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP டெலிபோட்டோ கேமரா
- ஏ.ஆர். மூலம் ரியல்-டைம் மொழி பெயர்ப்பு வசதி
- ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை, இண்டிபென்டெண்ட் ஐஎஸ்பி
- 1020 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
- 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ்
- 10 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக பதிவு செய்யும் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் விலை CNY 2499 இந்திய மதிப்பில் ரூ. 29 ஆயிரத்து 275 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் கிரவுட்-ஃபண்டிங் விற்பனை நாளை (ஆகஸ்ட் 03) துவங்குகிறது. அதன் பின்னர் இந்த ஸ்மார்ட் கிளாஸ் CNY 2699 இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 615 விலையில் விற்பனை செய்யப்படும். இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வருகிறது.
- பவர் லென்ஸ்களையும் பயன்படுத்த இந்த ஸ்மார்ட்கிளாஸ் அனுமதிக்கிறது.
இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் நாய்ஸ், தற்போது தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்கிளாஸை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்கிளாஸ் தனித்துவமானதாகவும், ஃபேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோக்கிய அனுபவத்தை வழங்கும் நோக்கத்தோடும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நாய்ஸ் i1 ஸ்மார்ட்கிளாஸ் UVA/B 99% பாதுகாப்பு மற்றும் நீல ஒளி வடிகட்டுதலுடன் கூடிய டிரான்ஸ்பரண்ட் லென்ஸ்களை வழங்கும் சாதாரண கண்ணாடி போல் தெரிகிறது. மேலும் பவர் லென்ஸ்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. i1 ஆனது புரட்சிகரமான வழிகாட்டுதல் கொண்ட ஆடியோ வடிவமைப்புடன் வருகிறது.

இது 16.2mm டிரைவர்கள், MEMS மைக்ரோஃபோன்கள் மற்றும் மல்டி-ஃபங்க்ஸ்னல் டச் கண்ட்ரோல்களைக் கொண்டுள்ளது. மேலும் இது உங்கள் செல்போன் அழைப்புகளை நிர்வகிக்கவும், பாடல்களைக் கேட்கவும், ஒலியளவைக் கட்டுப்படுத்தவும், வாய்ஸ் அசிஸ்டண்ட்களை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ முறையில் அணுகவும் உதவுகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வருகிறது. கருப்பு நிறத்தில் வரும் இந்த ஸ்மார்ட்கிளாஸ் வட்டம் மற்றும் சதுரம் ஆகிய இரு வடிவிலான மாடல்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






