என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் போது பாறைகளில் மோதி பக்தர்களுக்கு எலும்பு முறிவு
- திருச்செந்தூரில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- தொடர் விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது மண்டல பூஜைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 7மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் வெயிலில் கைக்குழந்தையுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் கடலில் குளிக்கும் போது அலை இழுத்துச் சென்று பாறைகளில் மோதி, 10 பேருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கவனமாக நீராட கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






