search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் முதியவருக்கு கத்திகுத்து சமையல் தொழிலாளி கைது
    X

    திருச்செந்தூரில் முதியவருக்கு கத்திகுத்து சமையல் தொழிலாளி கைது

    • சரவணன் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
    • கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.

    திருச்செந்தூர்:

    திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பாக்கிய ரதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் கடந்த மூன்று மாதங்களாக திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.

    இதே கோவிலில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மேட்டூரை சேர்ந்த சுரேஷ்(45) ஓராண்டாக சமையல் வேலை செய்து வருவதாகவும், இவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவில் நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேஷை (56) புசாரி சரவணனுக்கு உதவியாக இருந்து வேலை செய்ய வேலைக்கு சேர்த்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், வெங்கடேசிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கோவில் வளாகத்தில் வெங்கடேஷ் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ் மீண்டும் வெங்கடேசிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந்த வெங்கடேஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×