ரஷிய பல்கலையில் கத்திக்குத்து தாக்குதல்: 4 இந்திய மாணவர்கள் உள்பட பலர் காயம்

ரஷியாவில் இந்தியர் உள்பட 8 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகினர்.இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷிய பல்கலையில் கத்திக்குத்து தாக்குதல்: 4 இந்திய மாணவர்கள் உள்பட பலர் காயம்
Published on

மாஸ்கோ:

ரஷியாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள அஃபா பகுதியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த மாணவர்கள் மீது திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். மேலும் தனது உடலையும் கத்தியால் கிழித்துக் கொண்டார்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசாரையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவரை மீட்ட போலீசார், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com