என் மலர்
நீங்கள் தேடியது "For the teenager"
- சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே கடனை திருப்பிக் கேட்ட வாலிபரை கத்தியால் குத்தினார்.
- இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே உள்ள வானகாரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் தியாகராஜன் (வயது 26). இவரது தம்பி அசோக், அதே பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் மகன் முனுசாமி என்கிற விஷால் (28) என்பவருக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார்.
வாங்கிய பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து நேற்று மாலை விஷாலிடம், எனது தம்பியிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பி தரவில்லை என தியாகராஜன் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த விஷால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தியாகராஜனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சேலம் திருவாக்வுண்டனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
- கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
சேலம்:
சேலம் திரு வாக்வுண்ட னூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 36). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு சரண்யா ( 27) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ( 32) என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூபதி கூறியதாவது-
கண்ணன் தனது மனைவியை அழைத்துச் சென்றதால் 2 குழந்தைகளும் தினமும் அம்மா எங்கே என்று கேட்டு அழுது அடம் பிடித்தனர்.சிறிய குழந்தைகளான அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கினேன்.அதனால் கண்ணனுக்கு போன் செய்து திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு அழைத்து இருவரும் மது அருந்தினோம். பின்னர் எனது செல்போனில் இருந்த குழந்தைகளின் படத்தை கண்ணனிடம் காண்பித்து குழந்தைகள் அம்மா இல்லாமல் அழுகிறார்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விடும் . எனவே எனது மனைவி சரண்யாவை எனது வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கண்ணனின் காலில் விழுந்து கேட்டேன். ஆனால் கண்ணன் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் எனது மனைவியும் கண்ணனும் நெருக்கமாக உள்ள படத்தை காட்டி, மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான், கண்ணனை தாக்கினேன். இவ்வாறு பூபதி கூறினார். கைது செய்யப்பட்ட பூபதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.