கடனை திருப்பிக் கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து

சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே கடனை திருப்பிக் கேட்ட வாலிபரை கத்தியால் குத்தினார்.இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடனை திருப்பிக் கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே உள்ள வானகாரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் தியாகராஜன் (வயது 26). இவரது தம்பி அசோக், அதே பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் மகன் முனுசாமி என்கிற விஷால் (28) என்பவருக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார்.

வாங்கிய பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து நேற்று மாலை விஷாலிடம், எனது தம்பியிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பி தரவில்லை என தியாகராஜன் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த விஷால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தியாகராஜனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com