தாரமங்கலம் அருகே கள்ளக்காதலியை குழந்தையுடன் அழைத்து சென்ற வாலிபருக்கு சரமாரி அடி-உதை

பூமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32), கல் உடைக்கும் தொழிலாளி.மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.
தாரமங்கலம் அருகே கள்ளக்காதலியை குழந்தையுடன் அழைத்து சென்ற வாலிபருக்கு சரமாரி அடி-உதை
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32), கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் பவித்ராவையும் அவரது 1½ வயது பெண் குழந்தையும் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டு ஓட்டம்பிடித்தார். இதுபற்றி மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.

இதை அறிந்த கோபி மற்றும் பவித்ரா ஆகியோர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அஜராகினர். போலீசார் பவித்ராவுக்கு அறிவுரை கூறி கணவருடன் செல்லுமாறு கூறினர். அதற்கு பவித்ரா தனது கணவருடன் செல்ல மருத்துவிட்டார்.

இதையடுத்து அவரை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இத னிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கோபி மற்றும் மாதேஷ் குடும்பத்தாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி கோபியை மாதேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

இதுபற்றி கோபியின் தாயார் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், நாகராஜ், மணி, வெங்கடேஷ், பெரியசாமி, விஜயா, இருசம்மாள் ஆகிய 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com