என் மலர்tooltip icon

    இந்தியா

    உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை வீட்டின் மாடியிலிருந்து தூக்கி வீசிய கணவன்
    X

    உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை வீட்டின் மாடியிலிருந்து தூக்கி வீசிய கணவன்

    • ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.
    • தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உத்தரப்பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவன் வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    ஜான்சியில் ராணிப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த தீஜா (26 வயது) 2022 ஆம் ஆண்டு முகேஷ் அஹிர்வாரை திருணம் செய்தார்.

    திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.

    அவர் வீட்டை விட்டு அதிகம் விலகி இருந்த முகேஷ் செல்லும்போதெல்லாம் தீஜாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து நேற்று முன் தினம், முகேஷ் வீட்டிற்கு வந்து தீஜாவை தாக்கி, கட்டாய உடலுறவு கொண்டுள்ளார்.

    நேற்று, மீண்டும் உடலுறவு கொள்ள முயன்றபோது தீஜா கடுமையாக எதிர்வினை ஆற்றினார். இதனால் கோபமடைந்த முகேஷ் தீஜாவை அவர்கள் வசிக்கும் இரண்டு மாடி கட்டிட வீட்டின் மாடிக்கு மாடிக்கு தூக்கிச் சென்று அங்கிருந்து கீழே போட்டுள்ளார்.

    தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர்.

    கணவர் மீது தீஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×