கனடாவில் இந்திய ஐ.டி. ஊழியர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

சந்தன் குமார் டொராண்டோவில் ஒரு கன்னட சங்கத்தை உருவாக்கி நடத்தி வந்துள்ளார்.நாடு திரும்பிவிடுமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை.
கனடாவில் இந்திய ஐ.டி. ஊழியர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை
Published on

கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

37 வயதான சந்தன் குமார் கர்நாடகாவின் பெங்களூரு புறநகப் பகுதியான நெலமங்களாவின் தியாமகொண்ட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 6-7 ஆண்டுகளாகக் கனடாவில் பிராம்ப்டன் பகுதியில் ஐ. டி. ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் உள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த சந்தன் குமார், மீட்கப்பட்டபோதும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தன் குமார் டொராண்டோவில் ஒரு கன்னட சங்கத்தை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சங்கத்தை அமைத்ததே அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

சாந்தன் குமாரின் தந்தை தந்தை நந்தகுமார் பேசுகையில், "கனடா சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், நாடு திரும்பிவிடுமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டோம்.

ஆனால் அவர் கேட்கவில்லை. இப்படி ஒரு கொடுமை நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் உடலை இந்தியா கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com