என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய மாணவர் பலி"
- மாணவரின் உடலை தாயகம் எடுத்து வர அனைத்து உதவியும் செய்து தரப்படும்.
- மாணவர் சாகேத் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கர்நாடகாவை சேர்ந்த சாகேத் சீனிவாசய்யா(வயது 22). சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த இவர் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார்.
பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரி மூலக்கூறு பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து வந்தார்.
இதற்கிடையே மாணவர் சாகேத் கடந்த 9-ந்தேதி திடீரென்று மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள ஒரு பூங்காவில் சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி அடங்கிய பை கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர் சாகேத்தை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மாணவர் சாகேத் சீனிவாசய்யா பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். அவரது உடலை போலீசார் மீட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியது.
இதுதொடர்பாக துணை தூதரகம் கூறும்போது, இந்த மிகவும் கடினமான நேரத்தில் மாணவர் சாகேத் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவரின் உடலை தாயகம் எடுத்து வர அனைத்து உதவியும் செய்து தரப்படும். அதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தது.
மாணவர் சாகேத் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரது மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மாணவர் சாகேத், சென்னை ஐ.ஐ.டியில் வேதியியல் பொறியியலில் இளங்கலை தொழில்நுட்ப படிப்பை முடித்தார். இங்கு அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை படித்தார்.
பின்னர் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தயாரிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார். அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பு மாணவர் சாகேத் படித்து கொண்டே அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்தார்.
தான் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஆர்வமாக உள்ளேன் என்று இணைய பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் அவர் அமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
- பலத்த காயம் அடைந்த இந்திய மாணவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
- அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
வாஷிங்டன்:
தெலுங்கானா மாநிலம் மதிரா நகரத்தை சேர்ந்தவர் அகில் சாய் (வயது25).
இவர் அமெரிக்கா மண்டோக மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயர் படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வைத்து இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அகில் சாய் தலையில் குண்டு பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இது பற்றி அறிந்ததும் தெலுங்கானாவில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மகன் உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய அரசும், தெலுங்கானா அரசும் முன் வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
- இந்திய மாணவர் மரணத்துக்கு காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
- பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளி மாணவர் சமீர்காமத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்த மாணவர் உமா சத்யசாய் காடே என்பவர் அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் உமா சத்யசாய் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, ஒகியோவின் கிளீவ்லேண்டில் இந்திய மாணவர் உமா சத்யசாய் காடேவின் துரதிருஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
அவரது குடும்பத்தினருடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மாணவர் உமா சத்யசாயின் உடலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்புவது உள்பட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் மரணத்துக்கு காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 10-வது சம்பவம் இதுவாகும். கடந்த மாதம் கொல்கத்தா நடன கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆந்திர மாணவர், வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்.
அதே போல் பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளி மாணவர் சமீர்காமத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார்.
- மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபல்லியை சேர்ந்தவர் தாசரி சந்து (வயது 20). இவர் கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தாசரி சந்து தனது நண்பர்களுடன் அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.
அப்போது மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார். சந்துவின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தங்கள் மகனின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் கிஷன் ரெட்டி கிர்கிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
- பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார்.
- பிரணீத் உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரணீத். இவர் கனடா நாட்டில் தங்கி சமீபத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
இந்த நிலையில் பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார். பிரணீத், அவரது அண்ணன் உள்ளிட்ட அனைவரும் ஏரியில் குதித்தனர். ஆனால் பிரணீத்தை தவிர மற்ற அனைவரும் கரை வந்து சேர்ந்தனர். பிரணீத்தை மட்டும் காணவில்லை.
இதையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் ஏரியில் இருந்து பிரணீத்தின் உடலை மீட்டனர். அவரது உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.






