என் மலர்
நீங்கள் தேடியது "League Match"
- ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
- ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6 லீக் ஆட்டம் மற்றும் ஒரு சூப்பர் 8 சுற்று போட்டி என ஆக மொத்தம் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி, கடந்த 8-ந்தேதி நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் (டி பிரிவு), நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் (டி பிரிவு) தோற்கடித்தன.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3-வது போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
நெதர்லாந்து அணி அமெரிக்காவை தோற் கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் (3 விக்கெட்) தோற்றது. 2-வது போட்டியில் நமீபியாவை (7 விக்கெட்) வீழ்த்தியது. அமெரிக்க அணி இந்தியாவிடம் 29 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 32 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இந்திய அணி ஆடாவிட்டாலும் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது. இதேபோல நாளையும் ரசிகர்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடைபெறும் மற்ற போட்டிகளில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே (கொழும்பு, காலை 11 மணி), கனடா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (டெல்லி, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் போட்டியில் அயர்லாந்தை 67 ரன்னில் வீழ்த்தி இருந்தது. ஜிம்பாப்வேயும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஓமனை (8 விக்கெட்) தோற்கடித்தது.
இத்தாலி, நேபாளம் அணிகள் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
- மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
- தென் ஆப்பிரிக்கா ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
புளோரிடா:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்லில் 23-வது 'லீக்' ஆட்டம் இன்று நடை பெற இருந்தது. இதில் 'டி' பிரிவில் உள்ள இலங்கை-நேபாளம் அணிகள் மோத வேண்டியது.
ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி தொடரில் மழையால் கைவிடப்பட்ட 2-வது போட்டி இதுவாகும். ஏற்கனவே 'பி' பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஸ்காட் லாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தாகி இருந்தது.
இலங்கை-நேபாளம் இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
வெற்றிபெற வேண்டிய ஆட்டம் மழையால் ரத்தானதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளி யேற்றப்படும் நிலையில் இருக்கிறது. இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசத்திடம் தோற்று இருந்தது.
1 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 17-ந் தேதி மோதுகிறது.
ஒரு புள்ளியுடன் உள்ள நேபாளம் அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் வங்காள தேசம், நெதர்லாந்து அணிகள் தலா 4 புள்ளியுடன் உள்ளன. இரண்டு அணிகளுக்கும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.






