என் மலர்
நீங்கள் தேடியது "ஈரான் கப்பல்"
- தாக்குதலை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
- 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் International Fleet Review (IFR) 2026 மற்றும் மிலன் (MILAN) 2026 கடற்படை பயிற்சி ஆகிய இரு பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 85 போர்க்கப்பல்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன. இதில் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஈரானின் ஐஆர்ஐஎன்எஸ் தேனா போர்க்கப்பலும் பங்கேற்றது.
கடற்படை பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து தேனா போர்கப்பல் ஈரான் திரும்பியது. இந்நிலையில் இன்று இலங்கை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது இந்தக் கப்பல்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கைக் கடற்கரையிலிருந்து சுமார் 40 நாட்டிகல் மைல் தொலைவில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலால் கப்பல் நீரில் மூழ்கியதாகவும், அதில் இருந்த சுமார் 180 பேரில் 100-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு ஈரானிய கப்பலில் இருந்து அபாய எச்சரிக்கை சமிஞ்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கை விமானப்படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, விமானப்படை, கடற்படை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்கள் உடலாக கண்டெடுக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் தெற்கு துறைமுக நகரமான காலியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இப்போது வழங்க முடியாது எனவும் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு அவர்கள் செல்வதற்குள் கப்பல் நீரில் மூழ்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் இந்த சம்பவம் நடந்தாகவும், ஆனாலும் இலங்கை கடற்படை உதவிகளை புரியும் என தெரிவித்துள்ளார்.
மறுபுறம் இந்த தாக்குதல் அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்டது என அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்தது என அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.






