என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியதாவது:

    இது நீண்ட நெடிய பயணமாக இருந்தது. 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது. ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை வழங்கினார்கள். அவர்கள் அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

    இரண்டு ஆண்டாக நாங்கள் கடுமையாக உழைத்து தற்போது உலகக் கோப்பையை மீண்டும் வென்றுள்ளோம்.

    நான் ஒவ்வொரு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள், அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும்.

    எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். அதுவும் இறுதிப்போட்டியில் ரன்கள் சேர்த்திருப்பது உண்மையிலே ஸ்பெஷலான ஒரு விஷயம்.

    பும்ரா ஒரு தலைமுறையின் கிடைக்கும் ஒரு வீரர். நான் எப்போதுமே அவரை இந்த தேசத்தின் சொத்து என்று தான் கூறுவேன். முக்கியமான ஆட்டங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும். எப்படி அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர்.

    எங்கள் அணியில் இரண்டு உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும். இதுதான் என்னுடைய வெற்றிக்கான ரகசியம் என தெரிவித்தார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, நெதர்லாந்தின் டேவிட் பை-பிரான்சின் பேப்ரிஸ் மார்டின் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-1, 6-3 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    சென்னை:

    அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    கடைசி 3 போட்டிகளில் சஞ்சு சாம்சனின் ஆதிக்கம் மற்றும் நிதானமான ஆட்டத்தைப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது.

    போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்ற அனைத்து வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். டி20 உலகக் கோப்பையை 3வது முறையாக வென்ற பெருமைமிக்க தருணத்தையும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றனர்.

    இதில் கார்லோஸ் அல்காரஸ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் உடன் மோதினார். சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-3 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சிலியின் அலிஜாண்ட்ரோ டபிலோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 255 ரன்கள் குவித்தது.
    • அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

    முதலில் ஆடிய இந்திய அணி அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடி அரை சதங்களால் 255 ரன்கள் குவித்தது.

    நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்றுது.

    இந்நிலையில், போட்டியை நடத்திய நாடு என்ற முறையில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனையை படைத்துள்ளது இந்தியா.

    இதேபோல், 3 முறை டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    புதுடெல்லி:

    அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    இந்த வெற்றி இந்திய அணியின் அசாத்திய திறன், உறுதி மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்துகிறது.

    ஒவ்வொரு இந்தியரின் மனதில் பெருமையையும், மகிழ்ச்சியையும் இந்த வெற்றி கொடுக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • ஆட்ட நாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
    • சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

    முதலில் ஆடிய இந்திய அணி அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடி அரை சதங்களால் 255 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

    இந்நிலையில், 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இதேபோல், சஞ்சு சாம்சன் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் உள்பட 321 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 255 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர்.

    கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிம் சைபர்ட் அதிரடியாக ஆடி 52 ரன்கள் குவித்தார். கேப்டன் சான்ட்னர் 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், அக்சர் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

    • அரையிறுதிலும், இறுதிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார்.
    • இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசினார்.

    இந்த தொடரில் தொடக்கத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி (6 இன்னிங்ஸ்) 319 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் இந்த தொடரில் 9 இன்னிங்சில் 317 ரன்கள் அடித்துள்ளார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, குரோசியாவின் வோனா வெகிக் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜெசிகா பெகுலா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கைலா டேவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் கேம்-ஐ 15-21 என எளிதாக இழந்தார் லக்சயா சென்.
    • 2-வது கேமில் கடுமையாக போராடி 20-22 என இழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்- தைவானின் லின் சுன்-யி-ஐ பலப்பரீட்சை நடத்தினார்.

    முதல் கேமை லின் சு-யின் 21-15 என எளிதாக கைப்பற்றினார். 2-வது சுற்றில் லக்சயாக சென் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 2-வது கேம் பரபரப்பாக சென்றது. என்றாலும் லின் சுன்-யி கடும் போராட்டத்திற்குப் பின் 22-20 என 2-வது கேம்-ஐ கைப்பற்றினார். அத்துடன் 2-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    2-வது செட்டில் லக்சயாக சென் ஒரு கட்டத்தில் 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 14-14 என சமநிலை பெற்றார். பின்னர் 18-16 என முன்னிலைப் பெற்றிருந்தார். ஆனால் லின் 18-18 என சமநிலைப் பெற்றார்.

    பின்னர் 20-22 என லக்சயா சென் தோல்வியடைந்தார்.

    • ஷிவம் துபே கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விளாசினார்.
    • 16 முதல் 19 ஓவர் வரை இந்தியா 27 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 98 ரன்கள் குவித்தது.

    அடுத்து சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது, இதனால் இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

    சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.

    ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 15 ஓவரில் 204 ரன்களைத் தொட்டது. இந்தியா 300 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    16-வது ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். 5-வது பந்தில் இஷான் கிஷன் 25 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.

    அடுத்த ஓவரை டஃபி வீசினார். திலக் வர்மா கொடுத்த கேட்சை ஃபின் ஆலன் பிடிக்க தவறினார். பிடித்திருந்தால் திலக் வர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார்.

    19-வது ஓவரை ஹென்றி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ஹர்திக் பாண்ட்யா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்தியா 16 முதல் 19 ஓவர் வரை 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே அடித்தது.

    கடைசி ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய துபே, அடுத்த 2 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட இந்தியாவுக்கு இந்த ஓவரில் 24 ரன்கள் கிடைத்தன.

    இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது. ஷிவம் துபே 8 பந்தில் 26 ரன்களும், திலக் வர்மா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×