டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து #T20WorldCup

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து #T20WorldCup
Published on

சென்னை:

அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

கடைசி 3 போட்டிகளில் சஞ்சு சாம்சனின் ஆதிக்கம் மற்றும் நிதானமான ஆட்டத்தைப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது.

போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்ற அனைத்து வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். டி20 உலகக் கோப்பையை 3வது முறையாக வென்ற பெருமைமிக்க தருணத்தையும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com