என் மலர்
கிரிக்கெட் (Cricket)

#T20WorldCup2026 பெருமகிழ்ச்சி சேட்டா... தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கு கோலி வாழ்த்து
- மிகவும் தகுதியான தொடர் நாயகன் சஞ்சு சாம்சனுக்கு எனது வாழ்த்துகள்.
- மிகவும் முக்கியமான நேரத்தில் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 80.25 சராசரியுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். 199 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் தகுதியான தொடர் நாயகன் சஞ்சு சாம்சனுக்கு எனது வாழ்த்துகள். மிகவும் முக்கியமான நேரத்தில் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். உங்களை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன், செட்டா (Chetta)!" எனப் பதிவிட்டுள்ளார்.






