என் மலர்
நீங்கள் தேடியது "யூடியூப் சேனல்"
- பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்கள் மூலம் பலர் அதிகளவு பணம் ஈட்டி வரும் நிலையில் அந்நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
யூடிட்யூப் சேனல்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள், ஒரு வீடியோ போலவே உருவாக்கப்பட்ட மற்றொரு வீடியோ, செயற்கை நுண்ணறிவை பயனப்டுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள், மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், மற்றவர்களின் வீடியோவை காப்பியடித்து சில திருத்தங்கள் மட்டும் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், தரம் குறைந்த வீடியோக்கள், டெம்ளேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றுக்கு பணம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
- 6 மாத குழந்தைக்கு ஹெகுரு (Heguru) பயிற்சி முறையை கற்பித்ததாகவு இந்திரஜா வீடியோ வெளியிட்டிருந்தார்.
- 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி என்று நெட்டிசன்கள் இந்திரஜாவை வறுத்தெடுத்தனர்.
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது இந்திரஜாவிற்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணத்திற்கு முன்பு பிகில், விருமன் படங்களில் நடித்துள்ள இந்திரஜா, திருமணத்திற்கு பின்பு நடிப்பதை தவிர்த்தார். குழந்தை பிறந்த பிறகு குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பயன்படுத்துவது குறித்து யூடியூப், இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டு வருகிறார். .
அண்மையில், அவரின் 6 மாத குழந்தைக்கு ஹெகுரு (Heguru) என்ற பயிற்சி முறையை கற்பித்ததாகவும், அது குழந்தைக்கு அறிவுத்திறனை வளர்க்க உதவும் என்றும் கூறி வீடியோ ஒன்றை இந்திரஜா பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி, குழந்தையை அவர்களாகவே வளரவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்திரஜாவை வறுத்தெடுத்தனர்.
நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து இந்திரஜாவும், அவருடைய கணவரும் சேர்ந்து 'உங்கள் பாண்டியம்மா' என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் இந்திய அரசு குழந்தை வளர்ப்பு குறித்து பல்வேறு விசயங்களை செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியுள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானது என்றும், அதை பின்பற்ற வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் உண்மை சரிபார்ப்பு அமைப்பு FACT CHECK செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன.
தவறான தகவல் 1 : ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள "Early childhood stimulation" என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர்.
தவறான தகவல் 2 : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை.
தவறான தகவல் 3 : ஒன்றிய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.
அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.
தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.
இது திரிக்கப்பட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது.
மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது 'JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION' என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் "RIGHT BRAIN EDUCATION" என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
தவறான தகவல்களைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை ரகானே பதிவிட்டு வருகிறார்.
- குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் யூடியூப் சேனல் தொடங்கி கிரிக்கெட் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார்.
- அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.
நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித், Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship போன்ற பந்தயங்களில் பங்கேற்றார்.
2003-ல், அவர் MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.
2010-ல், அஜித் குமார் FIA Formula Two Championship பந்தயத்தில் பங்கேற்றார். சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரான இதில், அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.
இதற்கிடைய, அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார். இந்த அணி மூலம் அவர் பந்தயங்களில் பங்கேற்றதோடு, இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் AjithKumarRacing என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த சேனல் மூலம் அஜித் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அஜித் குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூட் சேனலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
- பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல யூடியூப் சேனல்களை இந்திய அரசு இப்போது தடை செய்துள்ளது.
இதனுடன் பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சேனல்கள் மீதான தடை குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக எரிச்சலூட்டும், வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 16 யூடியூப் சேனல்களில் (முன்னலா கிரிக்கெட் வீரர்) சோயிப் அக்தரின் சேனல் மற்றும் அங்குள்ள பல முக்கிய ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார் டிவி, தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ஜியோ நியூஸ், சாமா ஸ்போர்ட்ஸ் மற்றும் உசைர் கிரிக்கெட் ஆகியவை முடக்கப்பட்டன என்று தெரிவித்தார்
முடக்கப்பட்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
- குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
சென்னை:
பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்தி சென்னை மாவட்ட செயலாளர் சுரேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக வீடியோக்களும் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் பேசும் நபர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை கூறிவருகிறார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் மத மாற்றத்தை தூண்டும் வகையிலும் அதில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே யூடியூப் சேனல் மீதும் அதில் பேசும் நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது.
- இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், பாராளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள், அரசின் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் தளங்கள் மீது புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் மேற்படி யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தது தெரியவந்தது. இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதும், இவை வெளியிட்ட வீடியோக்கள் 51 கோடிக்கு அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக பொய் தகவல்களைப் பரப்பிய இந்த சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது.
- ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறது.
- இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.
சென்னை:
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. உங்கள் செல்போன் நம்பருக்கு குறிப்பிட்ட அளவுக்கு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது.
அதனை பெறுவதற்கு நீங்கள் பாதி அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆசை காட்டுவார்கள். இதை நம்பி பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு மோசடிக்காரர்கள் கேட்கும் தொகையை கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம்.
இது போன்று குறிப்பிட்ட சில லிங்க்குகளை அனுப்பி அதனை கிளிக் செய்தால் உங்களுக்கு இத்தனை லட்சம் பணம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி மோசடி செய்வதும் மோசடியின் இன்னொரு வகை.
அதே நேரத்தில் உங்களுக்கு சில லட்சங்கள் பரிசு கூப்பன் விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற வேண்டுமென்றால் ஆன்லைனில் நாங்கள் கூறும் லிங்க்கில் சென்று குறிப்பிட்ட பணத்தை கட்டுங்கள் என்று கூறுவார்கள். இதை நம்பி பணத்தை இழந்து பலரும் தவித்து வருகிறார்கள். இப்படி ஆன்லைன் மோசடிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அந்த வகையில் புதிது புதிதாக ஆன்லைன் மோசடிகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதன்படி சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் மோசடிக்கும்பல் ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறது.
புதிய மோசடி கும்பல் இந்த முறை யூடியூப் சேனல் மூலமாக வலை விரித்து உள்ளது. யூடியூப் சேனல் ஒன்றின் லிங்க்கை அனுப்பி இதனை நீங்கள் லைக் செய்தால் போதும். உங்களுக்கு முதலில் சிறிய தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டுவார்கள். பின்னர் தனியாக டெலிகிராம் குரூப் ஒன்றை தொடங்கி இருப்பதாக கூறி அதில் உங்களையும் டீம் லீடர் போல சேர்த்து வங்கி கணக்கு ஒன்றை தொடங்க சொல்லி அதில் சென்று நீங்கள் பணம் செலுத்தினால் அதில் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை காட்டுவார்கள்.
இதை நம்பி சென்னையை சேர்ந்த என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் லட்சம் முதல் கோடி வரை பணத்தை முதலீடு செய்து ஏமாந்து தவித்து வருகிறார்கள். இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர். புகார் கொடுக்காமல் பலர் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்க ணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் ரூ.30 லட்சம் பணத்தையும் , தொழில் அதிபர் ஒருவர் ரூ.1.2 கோடியையும் இழந்துள்ளனர்.
இதில் நீங்கள் தொடக்கத்தில் கட்டும் ஆயிரக்கணக்கான பணத்துக்கு கூடுதல் வட்டியை மோசடி ஆசாமிகள் வழங்கி விடுவார்கள். அந்த பணத்தை நீங்கள் எடுத்து பயன்படுத்தி இருப்பீர்கள்.
இதன் பின்னர் நீங்கள் முதலீடு செய்யும் லட்சங்களையும் கோடிகளையும் மட்டுமே மோசடி பேர் வழிகள் தடுத்து நிறுத்தி சுருட்டி விடுகிறார்கள். இதனால் கடன் வாங்கி பணம் கட்டிய பலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது தேவையில்லாமல் ஆன்லைனில் சாட்டிங் செய்வதை தவிர்த்தலே போதும். இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்ப முடியும் என்று எச்சரித்து உள்ளனர்.
- சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
- சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
தற்போதைய நவீன காலத்தில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறிய குழந்தைகள் கூட செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண முடிகிறது.
செல்போன் பயன்படுத்துவோர் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
அதே சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர்கள், படிக்க வசதியில்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடுகிறார்கள்.
இதன்மூலம் கஷ்டப்படக்கூடிய நபர்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடிகிறது. அதேபோன்ற ஒரு செயலில் கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் செயல்பட்டுள்ளார்.
புற்றுநோய் பாதித்து அவதிப்பட்டு வரும் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காகவே அவர் யூடியூப்பில் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த 3 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் சிகிச்சைக்கு கொடுத்திருக்கிறார்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். பான் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகள் தேவிகா. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜனின் சொற்ப வருமானத்திலேயே அவரது குடும்பம் இயங்கி வருகிறது. இதனால் தனது மகளுக்கு சைக்கிள் கூட வாங்க வழியில்லாமல் இருந்திருக்கிறார்.
இதன் காரணமாக சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார். இதனால் சைக்கிள் வாங்குவது சிறுமியின் கனவாக இருந்துள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரேமா. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
அந்த பெண்ணின் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இதனால் அந்த பெண்ணுக்கு சிகிச்சை பெறக்கூட போதிய பணம் இல்லை. இதனையறிந்த சிறுமி தேவிகா, அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக யூடியூப்பில் "தேவுஸ் வேர்ல்ட்" என்ற பெயரில் கணக்கை தொடங்கினார். அதில் தனது கனவு மற்றும் தனது வீட்டின் அருகே சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெண் பற்றிய தகவல்களை பதிவிட்டார்.
மேலும் சிறுமி தேவிகா தனக்கு அதிர்ஷ்ட குலுக்கலில் கிடைத்த சைக்கிளை விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணின் சிகிச்சைக்கு வழங்கினார். சிறுமி தேவிகாவின் இந்த செயலை திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா அறிந்தார்.
அவர் சிறுமியை நேரில் வரவழைத்து பாராட்டினார். மேலும் சிறுமியின் செயல்பாடு குறித்து கலெக்டர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
அதன்பிறகே சிறுமியின் செயல் வெளியுலகுக்கு தெரியவந்தது. இதையடுத்து பலரும் சிறுமிக்கு பண உதவி செய்தனர். மேலும் பலர் சிறுமிக்கு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தனர். மொத்தம் சிறுமிக்கு 12 சைக்கிள்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் விற்றார்.
நிதியுதவி மற்றும் சைக்கிள்களை விற்று கிடைத்த பணம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிதியை சிறுமி திரட்டியிருக்கிறார். அவற்றை புற்றுநோயால் பாதித்து அவதிபட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்காக வழங்கியிருக்கிறார்.
தனது ஆசையைப்பற்றி சிந்திக்காமல், பரிசாக கிடைத்த சைக்கிள்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு வழங்கிய மாணவி தேவிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
- உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமை.
- பிரேசிலின் முன்னாள் அதிபர் இரண்டாவது இடம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் சந்தாதாரர் எண்ணிக்கை இரண்டு கோடியை கடந்து புதிய மைல்கல் எட்டியது. யூடியூபில் இத்தனை சந்தாதாரர் பெற்ற உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
இதுவரை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் 450 கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்துள்ளது. யூடியூபில் அதிக சந்தாதாரர்கள் பெற்ற உலக தலைவர்கள் பட்டியலில் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவ் 64 லட்சம் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக பார்வைகளை கொண்ட தலைவர்கள் பட்டியலில் உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது யூடியூப் சேனல் 22.4 கோடி பார்வைகளை கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் சேனலில் இருப்பதை விட பலமடங்கு குறைவு ஆகும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 7.89 லட்சம் சந்தாதாரர்களையும், துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகனின் யூடியூப் சேனல் 3.16 லட்சம் சந்தாதாரர்களையும் பெற்று இருக்கிறது.
- தன்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது.
- இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.
அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
- ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
- ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் சேனலின் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






