தனது குடும்பம் குறித்து யூடியூப் சேனலில் அவதூறு: நடிகர் அருண் விஜய் புகார்

தன்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
தனது குடும்பம் குறித்து யூடியூப் சேனலில் அவதூறு: நடிகர் அருண் விஜய் புகார்
Published on

தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.

அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com