ரேஸிங்கில் ஜெண்டில்மேன் டிரைவர் விருது வென்றார் அஜித்குமார்

குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்குமார் கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் . அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
ரேஸிங்கில் ஜெண்டில்மேன் டிரைவர் விருது வென்றார் அஜித்குமார்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com