

ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 27-ந்தேதி சதாப் கான் என பெயரிட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.
அதில் எங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்காவிடில் உங்களை கொலை செய்வோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடம் பீகாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.