என் மலர்tooltip icon

    இந்தியா

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்
    X

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்

    • இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக ஆனந்த் அம்பானி தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவராகவும், மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன குழுவில் நிர்வாகமற்ற இயக்குநர்களாகவும் உள்ளனர்.

    Next Story
    ×