என் மலர்
இந்தியா

டெல்லியில் சர்வதேச AI உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
- மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- அதிபர் மேக்ரான், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
டெல்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.
சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.
விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ குறித்த நேரடி செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
இந்த மாநாட்டில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.






