என் மலர்
தொழில்நுட்பம்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
- பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் C சீரிசில் முற்றிலும் புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி C85 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ 144Hz LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 5300+ mm² VC கூலிங், 8 ஜிபி ரேம், 10 ஜிபி வரை டைனமிக் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6 கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, AI எடிட் ஜீனி, 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் இதில் IP69 Pro வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி கொண்டுள்ளது, இது 2 நாட்கள் வரை பயன்பாட்டை உறுதியளிக்கிறது, இத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, கலிலியோ, QZSS, USB டைப்-C உள்ளது.
ரியல்மி C85 5ஜி ஸ்மார்ட்போன், பரோட் பர்பிள் மற்றும் பீகாக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடலின் விலை ரூ. 15,499 ஆகும். 6GB + 128GB மாடலின் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கிறது.
- அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
- நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், தற்போது, தனது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல், மூன்றாம் தரப்பு மூலம் விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள்.
அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும்.
- இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் 15 சிரீசின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15R அடுத்த மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும். இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடுகளுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாழ்நாள் முழுக்க உத்தரவாதத்துடன் கிரீன் லைன் (பச்சை கோடு) பிரச்சினை ஏற்படாது என ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த வார இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6T-ஐ போலவே இருக்கும் என தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மற்றும் 8000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இதன் இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் 50MP + 8MP கேமரா சென்சார்கள் இடம்பெறுகின்றன.
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது. வழக்கம் போல், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.
- 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
- இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.
கடந்த மாதம் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் அறிவித்த மிகப்பெரிய பணிநீக்கங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
நிறுவனம் சுமார் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது மென்பொருள் பொறியாளர்கள்தான் என்று தெரிவித்துள்ளது.
அதாவது, 14,000பேரில் 10 இல் 4 பேர் (சுமார் 1800 க்கும் அதிகமான) பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டனர்.
பொறியாளர்களைத் தவிர, கேமிங், விளம்பரங்கள் மற்றும் பரிசோதனைத் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.
பணிநீக்கங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் பொருளாதாரம் அல்லது செயற்கை நுண்ணறிவு அல்ல என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி கூறினார்.
இது நிறுவனத்தின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மாற்றம் என்று அவர் தெரிவித்தார். நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ஆக மாற்றுவது, தேவையற்ற துறைகளைக் குறைப்பது மற்றும் வேகமாக வேலை செய்வது எங்கள் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
- சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான தகவல்கள் கிடைக்கும்.
- பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் இருந்தால் போதும் நாட்டின் எந்த பகுதிக்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்று விடலாம். அந்த அளவிற்கு பிரபல வழிகாட்டி சேவை தளமாக கூகுள் மேப்ஸ் உள்ளது. தனது செயலில் புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் இணைத்துள்ளது. கூகுள் ஏ.ஐ.யான ஜெமினியுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும், மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான தகவல்கள் கிடைக்கும். விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும். இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, மேப்ஸ் புதிய அவதார் வசதியையும் வழங்குகிறது. பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸ் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் வாங்கும் வசதி உள்ளிட்டவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.
- பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
- எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான்.
கூகுள் உடைய தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ உடைய புழக்கம் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிசிசிக்கு அவர் அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு பிழைகளை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவை சொல்லும் அனைத்தையும் கண்ணை மூடித்தனமாகக் நம்பிவிடக் கூடாது. பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் முழு பலன்களையும் மக்கள் பெற வேண்டுமானால், ஏஐ தரும் தகவல்களுடன் மற்ற நம்பகமான தகவல் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், இந்த ஏஐ முதலீட்டு குமிழி வெடித்தால் எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான். இணையதளம் அறிமுகமானபோது அதில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அதன் தாக்கம் ஆழமானது. அது போல தான் ஏஐ துறையும்" என்று தெரிவித்தார்.
மேலும் ஏஐ அடிப்படையிலான சூப்பர் சிப்களை தாங்கள் உருவாக்கி வருவதாகவும், ஓபன் ஏஐ உடைய சாட்ஜிபிடி போட்டியை எதிர்கொள்ள ஆல்பாபெட் தனது முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
- இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கை வெளியிட்டுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளம்,சாட் ஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் உலகமெங்கும் பல இடங்களில் முடங்கின.
இவை, இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேர் சேவையின் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கையின்படி, இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் முடக்கம் குறித்த புகார்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சர்வர் இணைப்பு தோல்விகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.
இந்த கோளாறை உறுதி செய்துள்ள கிளவுட்பிளேர் நிறுவனம் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
- இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது.
நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 27ஆம் தேதி நத்திங் போன் (3a) லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தில் டெம்பர்டு கிளாஸ், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்கள், கிளிஃப் லைட், 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் டூயல் 5G உடன் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது, இது 3000 nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது போன் (3a)-ஐ போன்றது. இது சிஎம்எஃப் போன் 2 ப்ரோ மாடலை போன்றே மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ பிராசஸரால் இயக்கப்படுகிறது.
இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நத்திங் நிறுவனம் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும். மற்ற மாடல்களை போன்றே, இந்த ஸ்மார்ட்போனும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.
- இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
- விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும்.
விவோ நிறுவனத்தின் X300 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விவோX300 மற்றும் X300 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் இன்னும் இரு வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், விவோ X300 ஸ்மார்ட்போனின் விலை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தகவலின் அடிப்படையில், இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுடன் போட்டியிடக்கூடும். கூடுதலாக, ப்ரோ வேரியண்ட் உடன் தனித்தனியாக வாங்கக்கூடிய டெலி-கன்வெர்ட்டர் கிட் இந்திய விலையையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.
விவோX300 இந்தியாவில் விலை விவரம்:
டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி தனது எக்ஸ் தள பதிவில் விவோ X300 பேஸ் மாடலின் விலையை பகிர்ந்துள்ளார். அதன்படி விவோX300 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89,999 என்று அவர் கூறியுள்ளார். இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74,999 ஆகவும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 80,999 ஆகவும் இருக்கலாம்.
இது தவிர, இந்தத் சீரிசுக்கான டெலி-கன்வெர்ட்டர் கிட் அல்லது டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் விலை இந்திய சந்தையில் ரூ. 20,999 என கூறப்படுகிறது. இந்த கிட், கிளிக் செய்யப்படும் எந்தப் படத்தின் ஆப்டிகல் ஜூமையும் நீட்டிக்கும் Zeiss 2.35x டெலி-கன்வெர்ட்டர் லென்ஸ்களை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
புதிய விவோX300 ஸ்மார்ட்போன் சம்மிட் ரெட் நிறத்தில் வெளியாகும் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மிஸ்ட் ப்ளூ மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரீமியம் X300 ப்ரோ மாடல் டூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
இது தவிர, விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும் என்றும், இது VS1 ப்ரோ இமேஜிங் சிப் மற்றும் V3+ இமேஜிங் சிப் உடன் இணைக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 இல் இயங்கும்.
- இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
- ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்கிற மொபைல் ஆக்சரி ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபை ஆக்ஸசரி வேறு ஒன்றும் இல்லை.. துணியால் பின்னப்பட்ட மொபைல் வைப்பதற்கான ஒரு தோள் பை.
இது, ஆப்பிள் நிறுவனம், ஜப்பானிய ஆடை வடிவமைப்பாளரான இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
3D பின்னப்பட்ட துணியால் (3D-knit fabric) தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பாக்கெட் வடிவிலான தோள் பை, ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

இந்த மொபைல் பாக்கெட் இன்று முதல், ஆப்பிள் ஸ்டோர்களிலும், பிரான்ஸ், கிரேட்டர் சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் இணையதளத்திலும் கிடைக்கிறது.
இதன் வடிவமைப்பு திறந்தவெளி அமைப்புடன் (open structure) கூடிய பாக்கெட், ஸ்டைலிஷாக கையில் அல்லது தோளில் அணிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
மொபைல் பாக்கெட் வகைகள் மற்றும் விலை: கையில் மட்டும் மாட்டக்கூடிய ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் ரூ.13,300,லாங் ஸ்ட்ராப் வெர்ஷன் (தோளில் அணியும்): ரூ.20,379 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தால் ஹை-பேஷன் ஆக்ஸசரி என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் பாக்கெட் ஸ்டைலாக அணிந்து செல்ல உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறினாலும், வர்த் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகிறது.
இது ஒரு சாதாரண துணி பை போன்று இருப்பதாகவும், இதற்காக விலை ரூ.20,000 ? எனவும் நெட்டிசன்கள் வாயை பிளக்கின்றனர்.
- 3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது.
- இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும்.
மனிதனின் 6-வது விரல் ஸ்மார்ட்போன் என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடும் சேவையும் அதிகரித்துள்ளது. தகவல் தொடர்பு, இணைய அணுகல், புகைப்படம் எடுக்கும் வசதி, பண பரிவர்த்தனை, ஏ.ஐ., என பல அம்சங்களை ஒருங்கே பெற்ற தொழில்நுட்ப சாதனமாக ஸ்மார்ட்போன் விளங்குகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இயங்காது என்பதால் ஸ்மார்ட்போன் யுகம் என்ற சொல்பதத்துக்கு பொருத்தமாக அதன் செயல்பாடு உள்ளது. மேலும் செல்போன் ஒரு ஆடம்பர குறியீடாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு அம்சமாகவும் மாறியுள்ளது.
இத்தகைய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச டேட்டா கார்ப்ரேஷன் (ஐ.டி.சி.) என்னும் பிரபல தரவு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான 2-ம் காலாண்டில் (ஜூலை-செப்) நாட்டின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும். ஜி.எஸ்.டி. வரிசீர்திருத்தம், பண்டிகை காலம், வசதியான தவணை வசதி மற்றும் பழைய சாதனங்களை மாற்றும் திட்டங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி அடிப்படை நிலை ஸ்மார்ட்போன்களைவிட பிரிமியம் ரகம் என்னும் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படும் போன்களே அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் விவோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அது 18.3 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. விவோ நிறுவனம் இந்த பட்டியலில் 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஒபோ நிறுவனம் 13.9 சதவீதம் சந்தை மதிப்பை பெற்றுள்ளது. சாம்சங் 12.6 சதவீதம் அளவில் சந்தை மதிப்பை பெற்றது. செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தநிலையில் அந்த நிறுவனம் 50 லட்சம் செல்போன்களை விற்று இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக மோட்டோரோலா நிறுவனம் 52.4 சதவீதம் வருடாந்திர உயர்வை கண்டு பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை சராசரி ரூ.26,079 (294 டாலர்கள்) ஆக இருந்துள்ளது.
- நத்திங் நிறுவனம் புதிய போன் 3a லைட் இந்திய வெளியீட்டை எக்ஸ் தள பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறது.
- "லைட்-னிங் எப்போதும் இன்னும் ஏதாவது ஒன்றோடு சேர்ந்தே இருக்கும்" என்று நிறுவனம் பதிவிட்டுள்ளது.
நத்திங் நிறுவனம் கடந்த மாதம் நத்திங் போன் 3a லைட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது நத்திங் நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நத்திங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நத்திங் ஸ்மார்ட்போன் எச்சரிக்கைகளுக்கான புதிய ஜிஎல்பி லைட்டுடன் வருகிறது, இது அந்நிறுவனத்தின் பாரம்பிரய கிளிஃப் இன்டர்ஃபேஸை மாற்றுகிறது.
நத்திங் நிறுவனம் புதிய போன் 3a லைட் இந்திய வெளியீட்டை எக்ஸ் தள பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறது. "லைட்-னிங் எப்போதும் இன்னும் ஏதாவது ஒன்றோடு சேர்ந்தே இருக்கும்" என்று நிறுவனம் பதிவிட்டுள்ளது. இது புதிய ஸ்மார்ட்போன் கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் "விரைவில் வருகிறது" என நத்திங் தெரிவித்துள்ளது.

நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு விதமான நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நத்திங் வெளியிட்டுள்ள டீஸர் படம் தெரிவிக்கிறது.
நத்திங் போன் 3a லைட் அம்சங்கள்:
6.77-இன்ச் ஃபுல் ஹெச்டி + 1080×2392 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ பிராசஸர்
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ராவைடு கேமரா, மூன்றாவது சென்சார்
16MP செல்ஃபி கேமரா
டூயல் சிம் (நானோ + நானோ)
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5
வைபை 6, ப்ளூடூத் 5.3
IP54 சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட்
5,000mAh பேட்டரி
33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்






