என் மலர்
தொழில்நுட்பம்
- அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக இருக்கும் OpenAI, இந்திய பயனர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவின் அதன் மேம்பட்ட பிரீமியம் சந்தா திட்டமான 'ChatGPT Go' ஐ ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
நவம்பர் 4 முதல் தொடங்கும் சிறப்பு விளம்பர காலத்தில் பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ChatGPT Go என்றால் என்ன?
ChatGPT Go என்பது சமீபத்தில் OpenAI ஆல் தொடங்கப்பட்ட பிரீமியம் சந்தா திட்டமாகும். இதன் மூலம், ChatGPT இன் அதிநவீன GPT-5 மாடலின் அடிப்படையில் பயனர்கள் சேவைகளைப் பெறலாம்.
இதில் அதிக செய்தி அனுப்பும் வரம்பு, சிறந்த பட உருவாக்கம், அதிக கோப்புகள் மற்றும் படங்களை பதிவேற்றும் வசதி மற்றும் உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இந்த சாந்தா திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 4 முதல் இது இலவசமாக வழங்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.
- ChatGPT-யுடன் தீவிர உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
- 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகி உள்ளது.அதேசமயம் முன்னெப்போதும் இல்லாத அளவு நவீன யுக மனிதர்கள் தனிமைப்பட்டு போயிருக்கின்றனர்.
மேலும் இளைய தலைமுறையினரிடையே மனத்திடம் குறைந்து சிறிய விஷ்யங்களுக்கே தற்கொலை வரை செல்லும் போக்கும் அதிகரித்துள்ளது.
இதை மெய்ப்பிக்கும் விதமான முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான OpenAI ஒரு அதிர்ச்சியூட்டும் தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதன் Chatbot சேவையான ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்திற்கும்) அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தற்கொலை எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தரவு, மக்கள் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் AI-ஐ சார்ந்து இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

OpenAI மதிப்பீடுகளின்படி, ChatGPT-ஐ தற்போது வாரத்திற்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். அந்த பயனர்களில் 0.15 சதவீதம் பேர் ஒவ்வொரு வாரமும் தற்கொலை உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் அதிகப்படியான பயனர்கள் ChatGPT-யுடன் தீவிர உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள். மில்லியன் கணக்கான பயனர்களிடம் மனநலக் கோளாறுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்கொலை எண்ணங்கள் மற்றும் மன நல பிரச்சனைகள் குறித்து ChatGPT பதிலளிக்கும் விதத்தை மேம்படுத்த 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
ChatGPT இன் புதுப்பிக்கப்பட்ட GPT-5 மாடல் இதுபோன்ற உணர்திறன் வாய்ந்த தலைப்புகளில் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக OpenAI தெரிவித்துள்ளது.
தற்கொலை தொடர்பான உரையாடல்களில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பழைய மாடல் 77 சதவீதம் வெற்றி பெற்றிருந்தாலும், புதிய மாடல் 91 சதவீத துல்லியத்துடன் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- நத்திங் போன் 3a லைட் நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. அந்த வகையில், நத்திங் நிறுவனம் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த வரிசையில், தற்போது, நத்திங் போன் 3a லைட் விலை மற்றும் வெளியீட்டு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. புதிய நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.
பிரெஞ்சு வெளியீடான டீ-லேப்ஸ் அறிக்கையின்படி , நத்திங் போன் 3a லைட் நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 04 ஆம் தேதி ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தவிர, பிரான்சில் இந்த ஸ்மார்ட்போன் 249.99 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 25,525) ஆரம்ப விலையில் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சில ஐரோப்பிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விலை EUR 239.99 ஆக இன்னும் குறைவாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறுதுகிறது. மேலும், நத்திங் போன் 3a லைட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கக்கூடும்.
நத்திங் போன் 3a லைட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
கீக்பென்ச் தள விவரங்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் A001T என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மாலி-G615 MC2 GPU கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நத்திங் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் வரும் என்றும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 7800mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.
- ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் ரேசிங் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் பேசப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15 மாடலுடன் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற 27ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகின்றன. ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதியாகி இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் சீனா டெலிகாம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.
டெலிகாம் வலைத்தள பட்டியலில் ஒப்போ PLQ110 என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் ரேசிங் பிளாக் என மூன்றுநிறங்களில் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துவிட்டது.
இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும், IP66/68/69/69K டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று ஒன்பிளஸ் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7800mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 6 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.78-இன்ச் (2800×1272 பிக்சல்கள்) 1.5K AMOLED டிஸ்ப்ளே 165Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3nm பிராசஸர், அட்ரினோ 830 GPU
12GB / 16GB LPDDR5X RAM, 256GB / 512GB / 1TB UFS 4.1 மெமரி
டூயல் சிம் (நானோ + நானோ)
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16
50MP பிரைமரிகேமரா, OIS
8MP 120° அல்ட்ரா-வைடு கேமரா, 4K 60 fps வீடியோ பதிவு
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 7 802.11 be (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4
7800mAh பேட்டரி
120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஆம்ப்ளிபையர், எச்.டி. ஆடியோ என ஒலி தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- டேப்லெட் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
லெனோவா நிறுவனம் குரோம்புக் சீரிசில் முற்றிலும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. டூயட் டேப்லெட் என அழைக்கப்படும் புதிய டேப்லெட் மீடியாடெக் கோம்பேனியோ 838 பிராசஸரில் இயங்குகிறது. இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இத்துடன் கூகுள் ஒன் கிளவ்டு ஸ்டோரேஜ் மூலம் 100 ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் பெறலாம். புகைப்படங்கள் எடுக்க முன்பக்கம் 5MP கேமராவும், பின்பக்கம் 8MP கேமராவும் உள்ளன. கூகுள் குரோம்புக் உடன் ஜெமினி சேவையும் இடம் பெற்றுள்ளது.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஆம்ப்ளிபையர், எச்.டி. ஆடியோ என ஒலி தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
அளவீடுகளில் இது 21.81 செ.மீ. நீளத்தில் 1920x1200 பிக்சலுடன் 21.05 மி.மீ. தடிமன் கொண்ட திரை, 400 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்டின் எடை 1.1 கிலோ கிராம் ஆகும். இந்திய சந்தையில் இந்த டேப்லெட் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் பயன்படுத்தலாம்
- விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.
இதில் சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் குரோமுக்கு போட்டியாக ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி அட்லஸ் வெப் பிரவுசர் களம் இறங்கியுள்ளது.
தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் இதை பயன்படுத்தக்கூடிய நிலையில், விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் குரோமைப் போலவே இதுவும் Chromium based பிரவுசர் என்பதால், கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூகுளுக்கு சுமார் $150 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி, சீன சந்தையில் ஐகூ 15 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் 2K+ 144Hz 8T LTPO ஃபிளாட் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இது உலகின் முதல் 2K LEAD OLED தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. குறைந்த மின் நுகர்வு, அதிக பிரகாசம், மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு, மெலிதான வடிவமைப்பு மற்றும் உலகின் முதல் மகிழ்ச்சியான கண் பாதுகாப்பு 2.0 ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த ஸ்மா்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கிறது. 16 ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ப்ரோ ரேம் மற்றும் 1 டிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ 15 மாடலில் மிகப்பெரிய 8000மிமீ ஒற்றை அடுக்கு வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க ஐகூ 15 ஸ்மார்ட்போன் OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 50MPஅல்ட்ரா-வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 50MP சோனி ப்ரோ-லெவல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன.

புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
விலை விவரங்கள்:
சீன சந்தையில் புதிய ஐகூ 15 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 4199 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,780 என துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.
- புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ வாட்ச் S என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டைலிஷ் வட்ட-வடிவ டயல், மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இது வெறும் 8.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இதன் எடை சுமார் 35 கிராம் ஆகும்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய 16-சேனல் ஆப்டிகல் பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் 8-சேனல் ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய ஒப்போ வாட்ச் S மாடலில் ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் கேஸ், சிறந்த இருப்பிட துல்லியத்திற்கான இரட்டை அதிர்வெண் GPS மற்றும் கொழுப்பை எரிக்கும் பகுப்பாய்வை வழங்கும் AI ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளரையும் கொண்டுள்ளது.
கூடுதலாக, இது ECG, இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன், மணிக்கட்டு வெப்பநிலை, தூக்கம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.

புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ வாட்ச் S சில்வர் மற்றும் பிளாக் வேரியண்ட்கள் CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ. 16,030) என்றும் டூயல்-டோன் கிரீன் வேரியண்ட் CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ. 18,498) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
- ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.
ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி
சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.
இது ஒன்பிளஸ் 15ஐ போன்ற கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ்15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 இரண்டும் ஒப்போ இ-ஷாப், ஜெடி மால் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அறிமுகத்திற்குப் பிறகு அவை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீன் கொண்டிருக்கலாம். இத்துடன் 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அண்மையில் நாடு தழுவிய அளவில் BSNL நிறுவனத்தில்'4G' சேவை தொடங்கபட்டது.
- தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கியது.
இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். இந்நிலையில், தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.1 செலுத்தி புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும் என்றும் நவம்பர் 15 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன.
- M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ சீரிசை அப்டேட் செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு வெளியான M4 சிப்செட் கொண்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபேட் ப்ரோ சமீபத்திய M5 சிப்செட் கொண்டிருக்கின்றன.
இந்த டேப்லெட் வழக்கம் போல் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இவை புதிய M5 சிப்செட் உடன் வருகிறது. இதன் 256GB மற்றும் 512GB மாடல்களில் 9-கோர் CPU உடன் 3 பெர்ஃபார்மன்ஸ் கோர்கள் மற்றும் 12GB RAM உள்ளது. இதன் 1TB மற்றும் 2TB மாடல்களில் 10-கோர் CPU மற்றும் 16GB RAM உள்ளது. இவை இரண்டும் 10-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளன.
ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன. அவை 50% வேகமான செல்லுலார் தரவு செயல்திறனை உறுதியளிக்கின்றன. மேலும் செயலில் உள்ள செல்லுலார் பயனர்களுக்கு, M4 உடன் ஐபேட் ப்ரோவை விட 30% வரை குறைவான மின் பயன்பாட்டை உறுதியளிக்கின்றன என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
புதிய ஐபேட் ப்ரோ மாடலில், வைஃபை 7, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட் ஆகியவற்றை இயக்கும் புதிய ஆப்பிள் வடிவமைத்த வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சிப்: N1 இடம்பெற்றுள்ளது. 5GHz நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது N1 சிறந்த செயல்திறனைக் கொண்டுவருகிறது. மேலும் பெர்சனல் ஹாட்ஸ்பாட் மற்றும் ஏர் டிராப் போன்ற அம்சங்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறதும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது. ஆப்பிளின் புதிய 40W டைனமிக் பவர் அடாப்டர், 60W மேக்ஸ் ஆப்ஷனல் யுஎஸ்பி சி பவர் அடாப்டர் பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.
ஐபேட் ப்ரோ (2025) சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜிபி மாடல் ரூ. 99,900 என்றும், ஐபேட் ப்ரோ 11-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,19,900 என்றும் ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வை-பை) 256 ஜிபி ரூ. 1,29,900 என்றும்
ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,49,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
- உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.
- சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.
ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.
இந்தியாவை சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவை பெரும் வெற்றி பெற்றிருப்பது பெருமையான தருணம் ஆகும். பெர்ப்ளெக்சிட்டி சாதாரண சாட்பாட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Cha), மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக இருக்கிறது.
மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏஐ செயலியின் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் இதன் வெற்றியை எடுத்துக்காட்டுகின்றன.
தீபாவளி சீசனில் பெர்ப்ளெக்சிட்டியின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.






