என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    7000mAh பேட்டரி, 45W சார்ஜிங்... பட்ஜெட் விலையில் புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்..!
    X

    7000mAh பேட்டரி, 45W சார்ஜிங்... பட்ஜெட் விலையில் புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

    • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
    • பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனம் C சீரிசில் முற்றிலும் புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி C85 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ 144Hz LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 5300+ mm² VC கூலிங், 8 ஜிபி ரேம், 10 ஜிபி வரை டைனமிக் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6 கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, AI எடிட் ஜீனி, 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் இதில் IP69 Pro வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி கொண்டுள்ளது, இது 2 நாட்கள் வரை பயன்பாட்டை உறுதியளிக்கிறது, இத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, கலிலியோ, QZSS, USB டைப்-C உள்ளது.

    ரியல்மி C85 5ஜி ஸ்மார்ட்போன், பரோட் பர்பிள் மற்றும் பீகாக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடலின் விலை ரூ. 15,499 ஆகும். 6GB + 128GB மாடலின் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கிறது.

    Next Story
    ×