என் மலர்
தொழில்நுட்பம்
- IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
- ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.
சந்தைக்கு புதிதாக வந்திருக்கும் விவோ V60e, பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக, 200MP கேமராவுடன் ரூ.29,999 விலையில் கிடைக்கிறது. AI பெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
6,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய விவோ V60e ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன் டச் ஓஎஸ் கொண்டிருக்கும் விவோ V60e ஸ்மார்ட்போனிற்கு, ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்டுகள் வழங்குவதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போன்றவை இதன் மதிப்பை உயர்த்துகிறது.
- இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
- பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது
இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.
18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சங்கள் எழுந்தன.
இந்நிலையில், திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
இதன்மூலம் அபாயகரமான மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் உள்ளடக்கங்களை இனி 18 வயதுக்குக் குறைவானவர்களால் பார்க்க முடியாது. அதன்படி பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது
இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகிறது
- புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது.
- ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X300 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ ஸ்மார்ட்வாட்ச் அலுமினிய அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் GT2 என அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 2.5D வளைந்த 2.07-இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் சதுரங்க டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ப்ளூடூத், இசிம் (eSIM) ஆப்ஷன்களில் வருகிறது.
விவோ வாட்ச் GT2 மாடல் ப்ளூ ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் படிப்புகளுடன் 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது. இந்த வாட்ச் பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இத்துடன் பொருந்தக்கூடிய வாட்ச் டயல்கள் உள்ளன.
மேலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது. இசிம் பயன்படுத்தும் பட்சத்தில், இது 8 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விலை விவரங்கள்:
புதிய விவோ வாட்ச் GT2 புளூ, ஸ்பேஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் வண்ணங்களில் வருகிறது. இதன் ப்ளூடூத் வேரியண்ட் விலை CNY 499 (இந்திய மதிப்பில் ரூ. 6,220) ஆகவும், இசிம் வேரியண்ட் விலை CNY 699 (இந்திய மதிப்பில் ரூ. 8,710) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு மின்னஞ்சல்கள் வருகின்றன
- அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு வரும் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் உங்களின் PIN, கடவுச்சொற்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட ரகசியத் தகவல்களைக் கோராது.
இந்த மோசடி மின்னஞ்சல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று, உங்களின் நிதித் தகவல்களைத் திருடும் Phishing மோசடியின் ஒரு பகுதியாகும்.
சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in ஆகிய முகவரிகளுக்கு அனுப்பிவிட்டு, உடனடியாக அந்த மின்னஞ்சலை நீக்கிவிடுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.
- அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
- ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.
ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.
இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு
இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.
அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
- அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
- பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.
இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபாரத் மொபைல் போன்களுக்கான புதிய சேஃப்டி-ஃபர்ஸ்ட் (Safety First) திறனை அறிமுகப்படுத்தியது. இது குடும்ப தகவல் தொடர்பை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் ஜியோவின் மலிவு விலை 4ஜி தொலைபேசி தளத்திற்குள் ஸ்மார்ட் இணைப்பு மற்றும் டிஜிட்டல் பராமரிப்பை இணைத்து குடும்பங்கள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட உதவுகிறது.
ஜியோபாரத் சேஃப்டி ஃபர்ஸ்ட் தீர்வு, குடும்பங்கள் குழந்தைகள், வயதான பெற்றோர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்க எளிய, பாதுகாப்பான வழியை வழங்குகிறது, இவை அனைத்தும் அவர்கள் தூரத்திலிருந்து கூட. ஜியோ இந்த பாதுகாப்பு தொகுப்பை "பாதுகாப்பு கேடயம்" என்று குறிப்பிடுகிறது.
முக்கிய அம்சங்கள்:
இருப்பிட கண்காணிப்பு: அன்புக்குரியவரின் இருப்பிடம் குறித்த நிகழ்நேர அப்டேட்களை வழங்குகிறது.
யூசேஜ் மேனேஜர்: யார் அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம், தெரியாத எண்களைத் தடுக்கலாம் மற்றும் கவனச் சிதறல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம்.
சேவை ஆரோக்கியம்: நிலையான இணைப்பை உறுதி செய்வதற்காக பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் வலிமை குறித்த நேரடி விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.
எப்போதும் கிடைக்கும்: அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது
குழந்தைகளுக்காக: அழைப்பு மற்றும் இருப்பிடக் கட்டுப்பாட்டுடன், சமூக ஊடக வெளிப்பாடு இல்லாமல் பாதுகாப்பான தகவல்தொடர்பை செயல்படுத்துகிறது.
வயதான பெற்றோருக்கு: மன உறுதிக்காக ஆரோக்கியம் மற்றும் லொகேஷன் அப்டேட்களுடன் கூடிய எளிய இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.
பெண்களுக்கு: பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.
IMC25 இல், ஜியோ இந்த அம்சங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் மன அமைதியை எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் காட்டும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளை நிரூபித்தது - ஒவ்வொரு இந்தியருக்கும் தொழில்நுட்பம் என்ற அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
ஜியோபாரத் சேஃப்டி-ஃபர்ஸ்ட் போன்கள் ரூ. 799 விலையில் கிடைக்கின்றன.
- ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.
- புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மீடியாடெக் பிராசஸருக்கு பதிலாக எக்சைனோஸ் 1330 SoC பிராசஸரால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது. இத்துடன் ஜெமினி லைவ் ஆப்ஷன் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
முந்தைய கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இந்த ஸ்மார்ட்போன் சற்று மெல்லியதாகவும் இலகுவாகவும் மாறியுள்ளது. மேலும் கேமரா வடிவமைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் சஃபையர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மாடலின் விலை ரூ.12,499 என்றும் 6GB + 128GB மாடலின் விலை ரூ.13,999 மற்றும் டாப்-எண்ட் 8GB + 128GB மாடலின் விலை ரூ.15,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி M17 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் .
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ. 500 வங்கி சார்ந்த கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் உள்ளது.
- 164 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளையும், போன் அழைப்புகளை ஏற்று பேசவும், மறுக்கவும் உதவும்.
- இந்த கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், எதிரில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்யலாம்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான ஸ்மார்ட் கண் கண்ணாடிகள் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் கிளாஸ் மாடல் சாட் ஜிபிடியில் இயங்கக்கூடியது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைந்து, பல்வேறு பணிகளை செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, 164 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளையும், போன் அழைப்புகளை ஏற்று பேசவும், மறுக்கவும் உதவும். கூடுதலாக, இந்த கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், எதிரில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்யலாம். அதேபோல நம் அருகில் பேசுபவர்களின் உரையைகூட வாய்ஸ் ரெக்கார்டிங் முறையில், குரல் ஒலியை ஆங்கில வார்த்தைகளாகவும் மாற்றி, ஸ்மார்ட்போனில் பதிவு செய்ய முடியும்.
இவ்வளவு வசதிகளுடன், கண்களை பாதிக்காத வகையில் UV பாதுகாப்பு, Blue Light பாதுகாப்பு போன்ற கண் ஆரோக்கிய விஷயங்களை கொண்டுள்ளது. 200 மணிநேரம் இயங்கும் இந்த ஏ.ஐ. ஸ்மார்ட் கண் கண்ணாடியின் விலை ரூ.8,079 ஆகும். இந்த ஸ்மார்ட் ஏஐ கண் கண்ணாடி தண்ணீரிலும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் பெயருக்கு ஏற்றார்போல் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்டிரீம் பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் 395 PPI வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் G06 பவர் ஸ்மார்ட்போன் மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 50MP கேமரா, 7000mAh பேட்டரி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை 1 டிபி வரை நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 6.88 இன்ச் HD+ ஸ்கிரீன், 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
புதிய மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் பெயருக்கு ஏற்றார்போல் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்டிரீம் பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் 395 PPI வழங்கப்பட்டு இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.
பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்
இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
- ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
- இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சீன சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விற்பனையில் சிறந்து விளங்கிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மாடல்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதுபற்றி ஒன்பிளஸ் தரப்பில் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.
ஒன்பிளஸ் 15 பேட்டரி விவரங்கள்:
டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களின் படி , ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி வழங்கப்படும். இத்துடன் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்குமா, இல்லையா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
பேட்டரியைத் தவிர, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
ஒன்பிளஸ் போனில் உள்ள மிகப்பெரிய பேட்டரியைத் தவிர, இது முந்தைய தலைமுறைகளின் 120Hz பேனல்களிலிருந்து 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே தொழில்நுட்பம் போன்களில் கேம்களை விளையாடும்போது அதிக ஃபிரேம் வீதங்களை ஆதரிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16 உடன் வரும் என்றும், மற்ற சந்தைகளில் ஆக்சிஜன் ஓஎஸ் 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.
- அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்.
இந்தியாவின் அரசு தொலைதொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. கடந்த மாத இறுதியில் நாடு முழுவதுமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணையவசதியை பெறுவதற்கான 4ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த எட்டு மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் டவர்களும் 5ஜி-யாக மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி செல்போன் டவர்கள் அனைத்தும் 5ஜி-யாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்" என்றார்.






