என் மலர்
மொபைல்ஸ்

ஒன்பிளஸ் 15 தான் போட்டியே... X300 சீரிசை பந்தயம் கட்டும் விவோ... லீக் ஆன விலை விவரம்..!
- இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
- விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும்.
விவோ நிறுவனத்தின் X300 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விவோX300 மற்றும் X300 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் இன்னும் இரு வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், விவோ X300 ஸ்மார்ட்போனின் விலை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தகவலின் அடிப்படையில், இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுடன் போட்டியிடக்கூடும். கூடுதலாக, ப்ரோ வேரியண்ட் உடன் தனித்தனியாக வாங்கக்கூடிய டெலி-கன்வெர்ட்டர் கிட் இந்திய விலையையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.
விவோX300 இந்தியாவில் விலை விவரம்:
டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி தனது எக்ஸ் தள பதிவில் விவோ X300 பேஸ் மாடலின் விலையை பகிர்ந்துள்ளார். அதன்படி விவோX300 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89,999 என்று அவர் கூறியுள்ளார். இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74,999 ஆகவும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 80,999 ஆகவும் இருக்கலாம்.
இது தவிர, இந்தத் சீரிசுக்கான டெலி-கன்வெர்ட்டர் கிட் அல்லது டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் விலை இந்திய சந்தையில் ரூ. 20,999 என கூறப்படுகிறது. இந்த கிட், கிளிக் செய்யப்படும் எந்தப் படத்தின் ஆப்டிகல் ஜூமையும் நீட்டிக்கும் Zeiss 2.35x டெலி-கன்வெர்ட்டர் லென்ஸ்களை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
புதிய விவோX300 ஸ்மார்ட்போன் சம்மிட் ரெட் நிறத்தில் வெளியாகும் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மிஸ்ட் ப்ளூ மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரீமியம் X300 ப்ரோ மாடல் டூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
இது தவிர, விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும் என்றும், இது VS1 ப்ரோ இமேஜிங் சிப் மற்றும் V3+ இமேஜிங் சிப் உடன் இணைக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 இல் இயங்கும்.






