என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    மலிவு விலை மேக்புக் அறிமுகப்படுத்தும் ஆப்பிள்? விலை இவ்வளவு தானா..?
    X

    மலிவு விலை மேக்புக் அறிமுகப்படுத்தும் ஆப்பிள்? விலை இவ்வளவு தானா..?

    • இந்த லேப்டாப் A18 Pro சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
    • குறைந்த விலை மேக்புக் மாடல் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் பட்ஜெட் பிரிவில் லேப்டாப் அறிமுகம் செய்ய இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. மலிவு விலை லேப்டாப் சந்தையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட ஆப்பிள் நிறுவனம் ஒரு முதன்மையான மேக்புக்கை அறிமுகப்படுத்துவதாக தொடர்ச்சியாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் மலிவு விலை லேப்டாப் மாடல் இறுதியாக 2026 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும் என்று ஒரு சந்தை ஆராய்ச்சி நிறுவனம் பகிர்ந்து கொண்ட சமீபத்திய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களைப் போலவே 12.9 இன்ச் டிஸ்ப்ளேவையும், மேக்புக் ஏர் மாடலுக்கு கீழே ஸ்லாட்டையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்தை ஆராய்ச்சி நிறுவனமான TrendForce பகிர்ந்து கொண்ட சமீபத்திய தகவல்களின்படி , ஆப்பிள் 12.9 இன்ச் மேக்புக்கை 2026 ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தும். இது என்ட்ரி-லெவலில் தொடங்கி மிட் ரேஞ்ச் அளவிலான லேப்டாப் பிரிவை இலக்காகக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாடலின் உற்பத்தி 2025 ஆம் ஆண்டின் 3வது தொடங்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது, மேலும் ஆண்டு இறுதிக்குள் முழு அசெம்பிளி தொடங்கும் என்று கூறப்பட்டது.

    முந்தைய தகவல்களின்படி, இந்த மேக்புக் மாடல் 12.9 இன்ச் ஸ்கிரீனை கொண்டிருக்கலாம், இது ஆப்பிளின் வரிசையில் மிகச்சிறிய ஸ்கிரீன் கொண்ட மேக்புக் ஆக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.

    இந்த லேப்டாப் A18 Pro சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சிலிகான் சிப்பில் M1 மேக்புக் ஏர்-ஐ போன்ற ஹெக்ஸா-கோர் CPU, ஹெக்ஸா-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை உள்ளன.

    குறைந்த விலை மேக்புக் மாடல் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தன்டர்போல்ட் போர்ட் போன்ற பல தரப்படுத்தப்பட்ட ஆப்பிள் அம்சங்களையும் கொண்டிருக்காமல் இருக்கலாம். அதற்கு பதிலாக, இது எளிய யுஎஸ்பி டைப் சி போர்ட்களைக் கொண்டிருக்கலாம்.

    மேக்புக் ஏர் மற்றும் ப்ரோ மாடல்களைப் போலவே, குறைந்த விலை மேக்புக் புளூ, சில்வர், ரோஸ் கோல்டு மற்றும் எல்லோ உள்ளிட்ட பல பிரகாசமான வண்ணங்களில் வழங்கப்படலாம். அமெரிக்காவில் இதன் விலை $699 (தோராயமாக ரூ. 63,000) முதல் $799 (தோராயமாக ரூ. 72,000) வரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×