search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி அறிமுகம் செய்த ஜீப்
    X

    முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி அறிமுகம் செய்த ஜீப்

    • இந்திய சந்தையில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது.
    • இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடலின் விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    புதிய 2022 ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் குவாட்ரா டிராக் ஐ 4x4 சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட், ஆட்டோ, ஸ்னோ மற்றும் சேண்ட்/மட் என நான்கு வித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபேம்டு 7 ஸ்லாட் கிரில், டூயல் எல்இடி டிஆர்எல், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், பின்புற பம்ப்பரில் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புறத்தில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டோன் இண்டீரியர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பவர்டு முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 10.25 இன்ச் பேசன்ஜர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு 110 மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், எட்டு ஏர்பேக், 360 டிகிரி சரவுண்ட் வியூ, டிரௌசி டிரைவர் டிடெக்‌ஷன், 3-பாயிண்ட் சீட் பெல்ட், அனைத்து பயணிகளுக்கும் occupant டிடெக்‌ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவுக்கு சிகேடி முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் வலதுபுற டிரைவ் யூனிட்கள் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    Next Story
    ×