என் மலர்
இந்தியா

VIDEO: நடுரோட்டில் காரில் வந்த குடும்பத்தினரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது
- இந்த சம்பவம் காரின் கேமராவில் பதிவாகியுள்ளது
- இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை கத்தியை காட்டி இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரின் கேமராவில் பதிவான இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், காரில் உள்ள நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் ஏன் எங்களை திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு கோவமான அந்த இளைஞர் பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காரின் அருகே வந்து பாக்கெட்டில் உள்ளே இருந்த கத்தியை எடுத்து சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சையத் அர்பாஸ் கான் என்று அவர் ஒரு மீன் கடையில் வேலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், "பெங்களூரு நகரக் காவல்துறை, சாலையில் மோசமாக நடந்து கொள்வதையோ அல்லது பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடத்தைக்கோ பொறுத்துக்கொள்ளாது. வன்முறைச் செயல்கள், ஆயுதங்களைக் காண்பித்தல், மிரட்டல்கள் அல்லது பொது இடங்களில் அநாகரிகமான நடத்தை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது அமைதியைப் பேணுவதற்கும், பெங்களூரு நகரக் காவல்துறை சாலையில் மோசமாக நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும், பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், சட்டத்திற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






