என் மலர்
நீங்கள் தேடியது "moving train"
- 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
- சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆரணி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது37). இவரது மனைவி கலையரசி. இவர்கள் 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யனார் பாளையம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் ரெயில் சென்றபோது சிவகண்டன் கதவை திறந்து கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஓடும் ரெயிலில் இருந்து சிவகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கலையரசி கணவனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது 2 பேரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதைபார்த்த சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து வந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர்.
- ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு:
கேரள மாநிலம் கொல்லம் கடக்கல் பகுதியை சேர்ந்தவர் தீபக் (46). பல் டாக்டர். சம்பவத்தன்று கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.
அதே ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர். ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த 3 வாலிபர்களும் தீபக்கை தாக்கினர். இது குறித்து தீபக் பெங்களூரு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் ஈரோடுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
- ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கடந்த 23ஆம் தேதி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் ரோஸ் கலர் அறிக்கை சட்டை, ரோஸ் கலர் வேட்டி அணிந்திருந்தார். மேலும் வலது முன் கையில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் ஒரு காயத்தழும்பும் இருந்தது.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த முதியவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதி சேர்ந்த ஆறுமுகம் (69) என தெரிய வந்தது.
இவர் கடந்த 23ஆம் தேதி பாலக்காடு - திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொடுமுடி தாண்டி சென்ற போது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தது தெரிய வந்தது.
இதன் பின்னர் ரயில்வே போலீசார் கரூரில் உள்ள முகவரியில் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இல்லை என தெரிய வந்தது.
இந்நிலையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






