ஓடும் ரெயிலில் பல் டாக்டருக்கு அடி உதை

ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர்.ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
ஓடும் ரெயிலில் பல் டாக்டருக்கு அடி உதை
Published on

ஈரோடு:

கேரள மாநிலம் கொல்லம் கடக்கல் பகுதியை சேர்ந்தவர் தீபக் (46). பல் டாக்டர். சம்பவத்தன்று கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.

அதே ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர். ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த 3 வாலிபர்களும் தீபக்கை தாக்கினர். இது குறித்து தீபக் பெங்களூரு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகார் ஈரோடுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com