என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்"
- பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அங்கிருந்து கலைந்து செல்ல பொதுமக்கள் மறுத்துவிட்டனர்.
- போலீஸ் வாகனத்தை சிறைபிடித்த பெண்களால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஈசாந்தை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த போர் பழுதடைந்ததால் 2 வருடங்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த, குடிநீர் கை பம்பை அகற்றிவிட்டு, மேலும் ஆழப்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க, போர் வாகனத்தை வரவழைத்து அதற்குண்டான பணியை செய்ய முயற்சி செய்தபோது, தனிநபர் ஒருவர் இது தனக்கு சொந்தமான இடம் இங்கே போர் போடக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் தனிநபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் போலீஸ் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அங்கிருந்து கலைந்து செல்ல பொதுமக்கள் மறுத்துவிட்டனர். பின்னர் அங்கிருந்து போர் வாகனம் அந்த வழியே புறப்பட்டு சென்றதால் வேறி வழி இன்றி போலீஸ் வாகனத்தை பெண்கள் விடுவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பிரச்சனையை சரி செய்யும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போர் போடும் பிரச்சனையின் காரணமாக போலீஸ் வாகனத்தை சிறைபிடித்த பெண்களால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
- 745 பேர் மீது வழக்கு
- கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
நாகர்கோவில்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய 745 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் மப்டி உடையில் ரோந்து சுற்றி வந்தனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் சோதனை செய்தனர். வருகை பதிவேட்டில் உள்ளவர்கள் மட்டும் தங்கி உள்ளார்களா? வேறு நபர்கள் தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள். நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சென்னை கோவை பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து வந்த ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலை யத்திலிருந்து வெளியூருக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
பிளாட்ஃபாரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.கன்னியாகுமரி நாங்குநேரி வள்ளியூர் இரணியல் குழித்துறை ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி களியக்கா விளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வசதியாக திருப்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார்.காவலர்கள் பணியில் சிறந்து விளங்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், நாள் முழுவதும் சுறு, சுறுப்பாக இயங்கவும் தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.






