என் மலர்
நீங்கள் தேடியது "NOTA"
- குஜராத்தில் பா.ஜ.க. தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.
- இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
புதுடெல்லி :
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சாதனை வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நோட்டா ஓட்டுகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று கூறி அவர்களை நிராகரிக்கும் வகையில் கடைசியில் இடம்பெறுகிற சின்னத்தில் பதிவு செய்கிற வாக்கு ஆகும்.
இந்த சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 202 ஓட்டுகள் விழுந்துள்ளன. மொத்த வாக்குகளில் இது 1.5 சதவீதம் ஆகும். கடந்த 2017 தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 594 ஆகும். இத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இந்த தேர்தலில் அதிகபட்சமாக கேத்பிரம்மா தொகுதியில் நோட்டாவுக்கு 7 ஆயிரத்து 331 ஓட்டுகள் விழுந்தன. தண்டா தொகுதியில் 5 ஆயிரத்து 213 வாக்குகளும், சோட்டா உதய்பூரில் 5 ஆயிரத்து 93 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.
- நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
- கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.
புதுடெல்லி:
தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் குறித்து ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு மேற்கொண்டது.
அதில், கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு மொத்தம் 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் மட்டும் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975. இதன் சதவீதம் 1.06 ஆகும்.
சட்டசபை தேர்தல்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 ஓட்டுகள்தான், நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டுகள் ஆகும்.
மிசோரமில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 2 ஆயிரத்து 917 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள்.
பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51 ஆயிரத்து 660 ஓட்டுகள்தான் அதிகபட்ச ஓட்டுகள்.
லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள் ஆகும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரத்து 636 வாக்குகளை (29.8 சதவீதம்) பெற்றது.

இதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ‘நோட்டா’ குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.
சென்னை ஐகோர்ட்டில், நிர்மல்குமார் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், ‘நோட்டா’வில் வாக்களிக்கலாம். ஆனால், இந்த ‘நோட்டா’ குறித்து பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தவில்லை.
இதனால், ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு தங்களுடைய வாக்குகளை செலுத்த மறைமுகமாக வாக்காளர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் விதிகளுக்கு எதிராக அமைந்து விடுகிறது. எனவே, நோட்டா குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு, உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “நோட்டா குறித்து பஸ் நிலையங்களிலும், தியேட்டர்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நோட்டா குறித்த துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, கோயம்பேடு, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய அளவிலான எல்.இ.டி., டி.வி. திரையில் விழிப்புணர்வு விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள் மூலமும், நடமாடும் வாகனங்கள் மூலமாகவும், நோட்டா குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த பதில் மனுவில், “தெற்கு ரெயில்வே, மெட்ரோ ரெயில் மூலமும் நோட்டா குறித்து விளம்பரப்படுத்தப்படுகிறது. போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், மாரத்தான் ஓட்டம் மூலமும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. நோட்டா குறித்து தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். #Nota #ChennaiHighCourt #ElectionCommission
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓட்டுப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு தலைப்புகளில் போஸ்டர்கள் அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
‘நமது இலக்கு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு’ என்று ஒரு போஸ்டரும், ‘ஓட்டளிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்’ என்ற தலைப்பில் மற்றொரு போஸ்டரும் அச்சிடப்பட்டுள்ளது.
உடல் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், சிரமமின்றி ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் என்ற தலைப்பில் உள்ள போஸ்டர், தேர்தல் ஆணையத்தின் ‘சிவிஜில் ஆப்’ நோக்கம், பயன்பாடு பற்றி விளக்குகிறது. இந்த போஸ்டர்கள் பொதுஇடங்கள், அரசு அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகளில் ஒட்டப்பட உள்ளது. #ElectionCommission #Nota
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
அந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளாகும். மெஜாரிட்டிக்கு 116 இடங்கள் தேவை.
காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜனதா 109 தொகுதியையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ்-2, சமாஜ்வாடி-1 சுயேட்சை-4 இடங்களில் வெற்றி பெற்றன.
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு நோட்டாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 22 தொகுதிகளில் பா.ஜனதா குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு நோட்டா முக்கிய பங்கு வகித்தது.

குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை மந்திரி நாராயணன்சிங் குஷ்வா 121 ஓட்டில் தோற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1550 வாக்குகள் கிடைத்தது. தமோ தொகுதியில் நிதி மந்திரி ஜெயந்த் மல்லையா 799 வாக்கில் தோற்றார். இங்குநோட்டாவுக்கு 1,299 ஓட்டுகள் கிடைத்தது.
ஜபல்பூர் வடக்கு தொகுதியில் சுகாதாரதுறை இணை மந்திரி சரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாத்திலும், (நோட்டா 1,209), புர்கான்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி 5,120 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 5,700) தோற்றனர்.
இதேபோல காங்கிரசுக்கும் சில தொகுதிகளில் நோட்டாவால் பாதிப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நோட்டாவுக்கு மொத்தம் 5.4 லட்சம் ஓட்டுகள் கிடைத்தது. இது 1.4 சதவீதம் ஆகும். இதன் மூலம் அந்த மாநிலத்தில் 5-வது இடம் கிடைத்தது.
பா.ஜனதா 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் 40.9 சதவீத ஓட்டுகளும், பகுஜன் சமாஜ் 5 சதவீத ஓட்டுகளும், ஜி.ஜி.பி. கட்சி 1.8 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதற்கு அடுத்த இடத்தில் நோட்டா இருக்கிறது. சமாஜ்வாடி ((1.3 சதவீதம்), ஆம் ஆத்மி (0.7 சதவீதம்) ஆகிய கட்சிகள் நோட்டாவுக்கு அடுத்த நிலையிலேயே உள்ளன. #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018






