என் மலர்

  நீங்கள் தேடியது "Lucifer"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி ஹிட்டான படம் 'லூசிபர்'.
  • லூசிபர் இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.


  லூசிபர்

  இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.


  லூசிபர் 2 படக்குழு

  இந்நிலையில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் சாதனையை, தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் திரைப்படம் அதிக வசூல் செய்து முறியடித்துள்ளது.
  மோகன்லால் நடிப்பில் உருவான ‘லூசிபர்’ படம் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வெளியானது. அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

  மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் தான் 150 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை, படம் வெளியான 25 நாட்களுக்கு உள்ளாகவே முறியடித்திருக்கிறது ‘லூசிபர்’.  அதோடு ‘புலிமுருகன்’ திரைப்படம் 50 நாட்களை நெருங்கிய வேளையில் 101 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ‘லூசிபர்’ திரைப்படம் 50 நாட்களை கடந்த நிலையில், 119 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

  இப்படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
  ×