search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சூடு"

    • மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.

    இதில், மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

    சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுசெய்தனர்.

    இதற்கிடையே, சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் புஜ் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை நேரில் சென்றார். அவர் சல்மான் கான் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் மந்திரி சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்திய வம்சாவளி தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
    • வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வணிக வளாகத்தில் புகுந்த ஆண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் அவரை பிடித்து சுட்டுக்கொன்றது. இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.

    அவருடைய பெயர் ஜோயல் காச்சி (40) என்பதும் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த அவர் மனநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதலோ, திட்டமிட்ட சதியோ கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி எமி ஸ்காட் சம்பவ இடத்தில் லாவகமாக மடக்கி பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமயோசிதமாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்திய எமி ஸ்காட்டுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளி தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். சிட்னி நகரை சேர்ந்த டெபாஷிஸ் சக்ரபர்த்தி-ஷாய் கோஷல் தம்பதி சம்பவம் நடந்தபோது வணிக வளாகத்தில் இருந்துள்ளனர். தாக்குதலின்போது அங்குள்ள சேமிப்பு கிட்டங்கியில் மறைந்திருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றி கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார். சம்பவம் நடந்த வணிக வளாக கட்டிடத்திற்கு நேரடியாக வந்த அவர், வணிக வளாகம் முகப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
    • மும்பை கிரைம் பிரிவு போலீசார் சல்மான் கான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு பாந்த்ராவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் 2 பேர் அதிகாலை 5 மணிக்கு சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர் எனவும் தெரிய வந்தது.

    தகவலறிந்து மும்பை கிரைம் பிரிவு போலீசார் சல்மான் கான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர்.
    • நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு நடக்கும் சம்பவம் அரிதானது.
    • இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர் ஒருவர் மூன்று பேரை சுட்டுக்கொலை செய்தார்.

    ஈரானில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதில் அவனுடைய தந்தை உள்ளிட்ட 12 உறவினர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் உள்ள மத்திய மாகாணம் கெர்மன். இங்குள்ள பர்யாப் கவுன்ட்டியில் உள்ள புறநகரின் கிராமம் ஒன்றில் குடும்ப பிரச்சனை காரணமாக, நடந்த சண்டையின் உச்சக்கட்டமாக இந்த துபாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உறவினர்கள் மற்றும் தந்தை ஆகியோரை வெறித்தனமாக சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் பாதுகாப்புப்படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து துப்பாக்கியல் சுட்டு கொலை செய்துள்ளனர்.

    ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்வது மிகவும் அரிதானது. அங்கே வேட்டையாடுவதற்கு மட்டும் மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது.

    இரண்டு வருடத்திற்கு முன்னதாக அரசு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று முறை கொலை செய்தார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

    • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் 875 பேர் துப்பாக்கிச்சூடு வன்முறையால் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இல்லினாய்ஸ் மாநிலத்தில் சிகாகோ அருகில் உள்ள ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ஏழு பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 23 வயதான அவருடைய பெயர் ரோமியோ நான்ஸ். சிகப்பு கலர் டொயோட்டா காம்ரி காரில் தப்பியோடிவிட்டார். ஆயுதங்களுடன் உள்ள அவர் ஆபத்தானவர் எனவும் எச்சரித்திருந்தார்.

    நான்ஸ் மற்றும் அவரது கார் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்ஸ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் முதல் மூன்று வாரங்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 875 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • கடந்த 2017-ல் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.
    • துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தின் அருகில்தான் பிரபல சூதாட்ட மையம் உள்ளது.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் உள்ளது.

    சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், "நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூன்று முறை துப்பாக்கியால் சுடும் பெரிய சத்தத்தை கேட்டேன். அதன்பின் இரண்டு முறை சத்தம் கேட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் போலீசார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் நான் அடித்தளத்திற்கு ஓடினேன். நாங்கள் அங்கு 20 நிமிடங்களில் பதுங்கி இருந்தோம்" என்றார்.

    லாஸ் வேகாஸில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூட நடைபெற்றது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 21 அதிகாரிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி நடவடிக்கை

    அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 21 அதிகாரிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மாவட்ட ஆட்சியராக இருந்த வி.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.-யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

     

     

     

    • பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்.
    • அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.

    கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்டுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

    இந்நிலையில், பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.

    • விவசாய கூலித் தொழிலாளியான ஈஸ்வரன் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.
    • உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் வனக்காப்பகம், கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் வனவர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து சென்றனர்.

    அப்போது சிலர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? என விசாரணை நடத்தப்பட்டது. இதில் இறந்தநபர் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என தெரிய வந்தது. அவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    விவசாய கூலித் தொழிலாளியான அவர் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். அத்துமீறி காப்புக்காட்டுக்குள் நுழைந்ததால் வேட்டைக்கு வந்தாரா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் லோயர் கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஈஸ்வரனின் உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொழிலாளி ஈஸ்வரன் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தார். மேலும் வனத்துறையினரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றார். இதனால் வனத்துறையினர் தங்களின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுக் கொன்றனர். அவருடன் வந்த சிலரையும் தேடி வருகின்றோம். காப்புக்காட்டுக்குள் பொதுமக்கள் வர அனுமதி இல்லை. வேட்டையாடும் கும்பல் அதிகளவில் வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே இது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    வனப்பகுதியில் நுழைந்த தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    லூயிஸ்டன்:

    அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார்.

    அந்நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நுழைந்து அந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அவர் அங்குள்ள மதுபான விடுதி, ஓட்டல், பவுலிங் விளையாட்டு மையம், வணிக வளாகத்தின் பொருட்கள் வினியோக மையம் ஆகியவற்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூடு காரணமாக லூயிஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர். அவர்களை போலீசார் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். அதில் அந்த நபர் துப்பாக்கியால் சுட தயாராகுவது இடம் பெற்று இருந்தது.

    அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்படியும் லூயிஸ்டன் நகரில் கடைகளை மூடவும் போலீசார் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்தியவரை பிடிக்க லூயிஸ்டன் நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    அந்த நபர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே போலீசுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் நடந்தால் போலீசுக்கு தகவல் கொடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்.

    இது தொடர்பாக மைனே மாகாண கவர்னர் ஜேனட் மில்ஸ் கூறும்போது, லூயிஸ்டனில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மாகாணம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு அப்பகுதியில் உள்ள மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் இச்சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ராபர்ட் கார்டு என்றும், மைனேவில் உள்ள அமெரிக்க ராணுவ ரிசர்வ் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவித்தனர்.

    ×