search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லால்"

    • இயக்குனர் அஹம்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" .
    • கிரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த வெப்தொடருக்கு ஆஷிக் ஐமர் கதை எழுதியுள்ளார்.

    ஜூன், மதுரம் படங்களை இயக்கிய இயக்குனர் அஹம்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" . பர்ஸ்ட் பிரிண்ட் ஸ்டுடியோஸ் (First Print Studios) சார்பில் ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ள இந்த வெப்தொடரில் லால், அஜு வர்கீஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    கிரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த வெப்தொடருக்கு ஆஷிக் ஐமர் கதை எழுதியுள்ளார். மேலும், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார், மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த வெப்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப்தொடர் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" வெப்தொடர் மலையாளத்தின் முதல் வெப்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • தமிழில் சண்டக்கோழி, மருதமலை, ஆழ்வார், தீபாவளி, தோரணை, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லால்.
    • இவர் பணகஷ்டத்தால் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன் என்றும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர். இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்த வில்லன் நடிகர் லால், நடிகை தமன்னா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் பண நெருக்கடியால் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்று லால் வருத்தம் தெரிவித்து உள்ளார். இவர் தமிழில் சண்டக்கோழி, மருதமலை, ஆழ்வார், தீபாவளி, தோரணை, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    லால்

    லால்

    லால் கூறும்போது ''எனக்கு கொரோனா பரவல் ஊரடங்கின்போது நிறைய பணக் கஷ்டம் ஏற்பட்டது. அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் நிறைய யோசித்தேன். அதில் நடிப்பதற்கு முன்னால் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது என்று நினைத்தேன். அப்போது இந்த விளம்பரம் மூலம் பெரிய பிரச்சினை வரும் என்றோ ரம்மி விளையாட்டு பலரை தற்கொலைக்கு கொண்டு செல்லும் என்றோ நினைக்கவில்லை. ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார்.

    ×