கவினின் `ஸ்டார்' திரைப்படம் இன்று முதல் ஓடிடியில்

ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது.இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கவினின் `ஸ்டார்' திரைப்படம் இன்று முதல் ஓடிடியில்
Published on

நடிகர் கவின் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து அவருக்கென நடிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அதன் பின்னர் தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்து `நட்புனா என்னன்னு தெரியுமா' படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகினார்.

அதைத்தொடர்ந்து லிப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்ததாக ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் டிரைலர் மிகப்பெரிய கவத்தை பெற்ற நிலையில் படத்தின் மீது மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

ஸ்டார் திரைப்படம் வெளியானதில் இருந்து மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.ஆனாலும் வசூல் ரீதியாக திரைப்படம் வெற்றியைக் கண்டது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இன்று அமேசான் பிரைமில் ஸ்டார் திரைப்படம் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com