search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "udhayanithi"

  • படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

  டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

  படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முக்கிய ரோலில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ளார். நேற்று ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துவிட்டது.

  நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் நடிகராக ஆகவேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் கல்லூரி பருவத்ஹின் முதல் வயது முதிர்ந்த காலம் வரை டிரெயிலரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவன் நடிகராக முயற்சிக்கும் பயணத்தில் அவன் படும் அவமானங்கள் , துக்கங்கள், காதல் இழப்பு, நடிபு பிறிவு, சமூகத்தில் மதிக்காமல் போவது, பணமில்லாமல் சுற்றுவது என பல காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளது.

  கவின் டிரெயிலரில் வரும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியுள்ளார். கோபம், இயலாமை, காதல் என நடிப்பை வேறுபடுத்தி காட்டியுள்ளார். சமீப காலத்தில் வெளிவந்த டிரெயிலர்களில் மிக சிறந்த டிரெயிலராக ஸ்டார் படத்தின் டிரெயிலர் அமைந்துள்ளது. அதனால் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  டிரெயிலரை பார்த்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் " ஸ்டார் படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே உடனே படத்தை பார்க்க வேண்டும்போல் இருந்தது. காட்சிகள், தோற்றம் என அனைத்தும் ஈர்க்கிறது. இது ஒரு நல்ல படம் எனத் தோன்றுகிறது" என கூறியுள்ளார்.

  படத்தை உதயநிதி பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.  

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
  • இப்படத்தின் ஒருகட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

   

  விடுதலை

  விடுதலை

  கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

   

  விடுதலை

  விடுதலை

  இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது.

  • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
  • இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

   

  விடுதலை 

  விடுதலை 

  கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   

  விடுதலை 

  விடுதலை 

  இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
  • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

   

  விடுதலை

  விடுதலை

  கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

   

  விடுதலை

  விடுதலை

  இந்நிலையில் விடுதலை படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  விடுதலை

  விடுதலை

   

  விடுதலை இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விடுதலை

  விடுதலை

   

  மேலும் கொடைக்கானலில் படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பல்கேரியாவில் இருந்து தமிழகம் வந்திருக்கும் ஸ்டண்ட் டீம் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் தலைமையில் இந்த ஆக்‌ஷன் காட்சியை அமைக்கின்றனர். விடுதலை படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

  • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
  • இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

  விடுதலை

  விடுதலை

   

   

  கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி விடுதலை படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கிறார்.
  • உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அறிவிப்பை கமல் வெளியிட்டார்.

  'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.

  மேலும், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 25-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார்.


  உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்

  இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் "ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.

  இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன், "அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
  • விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ், சூர்யா மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கமல் விலை உயர்ந்த பரிசினை வழங்கினார்.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.


  அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்தார்.


  தொடர்ச்சியாக படக்குழுவினருக்கு அன்பளிப்பு கொடுத்து வந்த கமல், தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு கொடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட உதயநிதி, நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. விக்ரமில் உடன் பணியாற்றியதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


  ×