சரித்திரத்தை மீண்டும் நினைவுறுத்துவோம் தம்பி - உதயநிதிக்கு கமல் வாழ்த்து

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கிறார்.உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அறிவிப்பை கமல் வெளியிட்டார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 25-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் "ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன், "அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com