சண்டை காட்சி படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் ஒருகட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வெற்றிமாறன் 
வெற்றிமாறன் 
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை
விடுதலை

விடுதலை

கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை
விடுதலை

விடுதலை

இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com