search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AMMA"

    நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சேர்த்ததற்கு எதிராக மோகன்லாலை விமர்சனம் செய்ததால், தனக்கு படவாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகை ரம்யா நம்பீசனுக்கு கூறியுள்ளார். #RemyaNambeesan
    கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்த ரம்யா நம்பீசன், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். 

    இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

    கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ரம்யா நம்பீசன் பேசும்போது, “நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவர் ரம்யா நம்பீசன் என்று அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” என்றார். 



    மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால், அவருக்கு எதிராக செயல்படுவதாக ரம்யா நம்பீசன் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. #RemyaNambeesan #AMMA #MalayalamActorsAssociation`

    திலீப் விவகாரத்தால் ஏற்பட்ட எரிச்சலால் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக நடிகர் மோகன்லால் கூறி வருவதாக கூறப்படுகிறது. #Mohanlal #Dileep
    கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நடந்ததும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டார். தற்போது மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் பொறுப்பேற்றதும் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகினர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகை, தனது புகார் குறித்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து கேள்விகள் எழுப்பியது.

    இந்நிலையில் மோகன்லால் நடிகர் சங்க நிர்வாகிகள் இடைவேளை பாபு உள்பட சிலரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை என்றால், ஏன் பயப்பட வேண்டும்? எல்லா வி‌ஷயத்திலும் தேவையில்லாமல் ஏன் மூக்கை நுழைக்கிறார்? இதனால் நடிகர்களுக்கு சமூகத்தில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது.



    இதே நிலை நீடித்தால் நான் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன். ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

    மோகன்லாலின் திடீர் ஆவேசத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனு முதல்-மந்திரியின் கவனத்திற்குச் செல்லாமல் தடுக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

    நடிகை பலாத்கார வழக்கில் தனிகோர்ட்டு அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று மலையாள நடிகர் சங்கம் சில நாட்களுக்கு முன்பு முடிவு செய்தது. இது தொடர்பாக கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு முதல்-மந்திரி பார்வைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த தகவல் திலீப்பிற்கு தெரிய வந்ததாகவும், அவர் இடையில் தலையிட்டு இந்த மனு முதல்-மந்திரி அலுவலகத்திற்கு செல்லாமல் தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் மோகன் லாலுக்கு தெரியவந்ததால் தான் அவர் எரிச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. #Mohanlal #Dileep #AMMA

    மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருந்த தன்னை சிலர் தடுத்துவிட்டதாக பார்வதி கூறிய நிலையில், பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்பு அளிக்க தயாராக இருப்பதாக மோகன்லால் கூறியுள்ளார். #Mohanlal #Parvathy
    நடிகை பார்வதி மலையாள நடிகர் சங்கம் குறித்து கூறிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    முன்னணி நடிகரும், நடிகர் சங்க தலைவருமான மோகன்லால் பார்வதி மீதான தன் கோபத்தை பதிவு செய்துள்ளார்.

    மலையாள நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் முன்னணி நடிகர் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்றார். நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது கடும் சர்ச்சை ஆனது. மலையாள நடிகைகள் நடிகர் சங்கத்தின் மீது தங்கள் வெறுப்பை காட்டி வருகின்றனர்.

    முன்னணி நடிகையான பார்வதி ஒரு பேட்டியில் நடிகர் சங்க தேர்தலில் முக்கிய பொறுப்புக்கு போட்டியிட விரும்பியதாகவும், சிலர் தன்னை தடுத்து விட்டதாகவும் கூறி இருந்தார். மோகன்லால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இது சர்ச்சை ஆனது.



    இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த மோகன்லால், ‘பார்வதியை போட்டியிட வேண்டாம் என்று யார் தடுத்தது? இதை நான் நம்பவில்லை. இது உண்மை என்றால் சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் அவர் கலந்துகொண்டு இதை தெரிவித்து இருக்கலாம்.

    எங்களில் யாராவது விட்டுக்கொடுத்து விலகி இருப்போம். இப்போது கூட அவர் விரும்பினால் பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Mohanlal #Parvathy

    நடிகர் சங்கத் தேர்தலில் பார்வதியை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும், மலையாள நடிகர் சங்கம் நடிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் நடிகை பத்மபிரியா குற்றம்சாட்டியுள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய தலைவராக போட்டியின்றி நடிகர் மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு மலையாள நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகளும் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் பெரிதானது.



    இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். மோகன்லால் கூறும்போது, நடிகை பலாத்கார வழக்கில் திலீப் சிக்கியதும், மம்முட்டி வீட்டில் அவசரமாக செயற்குழு கூட்டம் நடத்தி திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடந்தது அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை என்பதால் அடுத்த கூட்டத்தில் இதுபற்றி பேசி திலீப் நீக்கம் பற்றி இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நடிகர் சங்க கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதுபற்றி கூட்ட அஜண்டாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் முதலில் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திலீப்பை சேர்த்த பிறகு எதிர்க்கிறார்கள். வழக்கில் இருந்து விடுதலை ஆகும் வரை திலீப் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க மாட்டார். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவே நடிகர் சங்கம் உள்ளது.



    நடிகை பாவனா, ரம்யா நம்பீசன் ஆகியோரின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது. மற்றவர்கள் கடிதம் எதுவும் எங்களுக்கு வரவில்லை. நடிகைகள் தேர்தலில் போட்டியிட யாரும் அவர்களுக்கு தடை விதிக்கவில்லை. நடிகர் சங்கம் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகர் மோகன்லாலின் கருத்துகளுக்கு நடிகை பத்மபிரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மலையாள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை. இந்த சங்கம் நடிகைகளுக்கு எதிராகதான் செயல்படுகிறது. நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட பார்வதி முடிவு செய்தபோது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போதைய பொதுச் செயலாளர் இடைவேளை பாபு அவரை போட்டியிட விடாமல் தடுத்தார்.



    நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பது பற்றி எந்தவித தகவலும் கூட்ட அஜண்டாவில் தெரிவிக்கப்படவில்லை.

    இரண்டு நடிகைகளின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது என்று மோகன்லால் ஏன் கூறுகிறார் என்று தெரியவில்லை. 4 நடிகைகள் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகை பத்மபிரியாவின் குற்றச்சாட்டை நடிகர் சங்க பொதுச் செயலாளர் இடைவேளை பாபு மறுத்துள்ளார். பத்மபிரியாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், அவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை தான் தடுக்கவில்லை என்றும் கூறி உள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep #Padmapriya

    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் வெளியேறிய நிலையில், இளம் நடிகர், நடிகைகள் இணைந்து புதிய சங்கத்தை நிறுவ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #AMMA #Dileep
    மலையாள நடிகர் சங்கத்துக்கு புதிய தலைவராக மோகன்லால் பொறுப்பு ஏற்றதும் பின்னர், நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் நடிகர் சங்கத்தில் இருந்து நீங்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார். இது மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து முன்னணி நாயகிகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். 

    மேலும் 14 நடிகைகள் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்தனர். குற்றவாளிக்கு நடிகர் சங்கம் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். கேரள மகளிர் ஆணையமும் மோகன்லால் முடிவை விமர்சித்தது. பொதுக்குழுவில் ஒருமனதாக தீலிப்பை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டதாக மோகன்லால் விளக்கம் அளித்தார். 

    திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது மோதல் முற்றியுள்ளது. எதிர்ப்பாளர்கள் இணைந்து புதிய சங்கத்தை தொடங்க முடிவு எடுத்துள்ளனர். நடிகரும், இயக்குனருமான ஆஷி அபு, ராஜீவ் ரவி ஆகியோர் இந்த போட்டி சங்கத்துக்கு தலைமை வகிக்கின்றனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் சினிமா பெண்கள் கூட்டுக்குழு இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.



    திலீப்பை சேர்த்ததை எதிர்க்கும் மேலும் 100 நடிகர்-நடிகைகளும் புதிய சங்கத்தில் இணைய முன்வந்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் மலையாள நடிகர் சங்கத்தால் நடவடிக்கைகளுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட நடிகர்-நடிகைகளும் போட்டி சங்கத்தில் சேருகிறார்கள். நடிகர் ஆஷி அபு தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் திருவனந்தபுரம் திரும்பியதும் புதிய சங்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் மூத்த நடிகர் ஒருவர் கூறினார். 

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனையும், போட்டி சங்கத்தை உருவாக்கும் நடிகர்-நடிகைகள் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. #AMMA #MalayalamActorsAssociation #Dileep
    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக 14 கேரள நடிகைகள் மிரட்டல் விடுத்துள்ளனர். #AMMA #MalayalamActorsAssociation #Dileep
    கேரளாவில் நடிகையை கடத்தி ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது புதிதாக நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததற்கு மலையாள நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 4 நடிகைகள் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக மோகன் லால் அளித்துள்ள விளக்கத்தில் நடிகர்சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் பரிந்துரையின் பேரிலேயே திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி உள்ளார். அதேசமயம் தான் குற்றமற்றவன் என்பதை கோர்ட்டில் நிரூபித்த பிறகே நடிகர் சங்கத்தில் இணைய விரும்புவதாக திலீப் தெரிவித்தார். விரைவில் நடிகர் சங்க கூட்டம் கூட்டப்பட்டு திலீப் பிரச்சினை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.



    ஆனாலும் இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல்வேறு தரப்பில் இருந்தும் மோகன்லாலுக்கு எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடிகைகள் சம்யுக்தா, அமலா, ரஞ்சனி, சஜிதா உள்பட 14 நடிகைகள் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் பேஸ்-புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் ‘அம்மா’ என்றால் எல்லோரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். ஆனால் தற்போது நடிகர் சங்கம் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை. நடிகர், நடிகைகளிடம் வேறுபாடு பார்க்கப்படுகிறது. நடிகைகளுக்கு எதிராக நடிகர் சங்கம் செயல்படுகிறது. எனவே நாங்கள் ‘அம்மா’வில் நீடிக்க விரும்பவில்லை. என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நடிகை ஊர்மிளா உண்ணி இந்த பிரச்சினை தொடர்பாக கூறும்போது, பாதிக்கப்பட்ட நடிகை சங்கத்தில் உறுப்பினராக இருக்கும்போது பிரச்சினைக்குரியவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது தவறு. இதில் யார் தூண்டுதல் உள்ளது என்பது விரைவில் தெரிய வரும் என்றார்.

    இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் சானு கூறும் போது, கேரளாவில் கல்லூரி, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் நடிகர், நடிகைகளை அழைக்கக்கூடாது. கல்வியுடன் தொடர்புடையவர்களையே விழாக்களுக்கு அழைக்க வேண்டும் என்றார். #AMMA #MalayalamActorsAssociation #Dileep

    நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருந்து விடுதலை ஆகும் வரை நடிகர் சங்கத்தில் சேரமாட்டேன் என்று நடிகர் திலீப் நடிகர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். #ActressAbductionCase #Dileep
    மலையாள நடிகர்களுக்காக இயங்கி வரும் அமைப்பு ’அம்மா’. இதில் மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் கடந்த வாரம் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

    இதனை கண்டித்து ‘அம்மா’வில் இருந்து பாதிக்கப்பட்ட அந்த நடிகை மற்றும் சக நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன் ஆகியோர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்கள்.

    இந்தநிலையில் நடிகர் திலீப் ‘அம்மா’வுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க உள்ளதாக அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய தீர்மானத்தை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆனால் நான் எந்த தவறும் செய்யாமல் வழக்கில் சிக்கிக் கொண்டேன். இதில் இருந்து நிரபராதி என்று விடுதலையாகும் வரை எந்த சினிமா சங்கத்திலும் சேர விரும்பவில்லை. நடிகர் சங்கத்தை சிலர் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.



    முன்னதாக நடிகை ரம்யா நம்பீசன் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘‘திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டது மிகவும் பொறுப்பற்றத்தனம். இனியும் இதை எல்லாம் பொறுத்துகொண்டு இருக்க முடியாது. அதனால் விலகி விட்டோம்.

    நாங்கள் நால்வரும் அந்தச் சங்கத்திலிருந்து விலகிய பின்னர் அவர்கள் எங்களுக்கு ஏதாவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் மற்ற பெண்களிடமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

    நாங்கள் பெண்களுக்கான தனிஅமைப்பு தொடங்கும் வரை அதற்கான தேவை இல்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் பெண்களுக்கு என்று உருவாக்கிய ஒரு இடம் அது. சினிமாவில் பெண்களுக்கு எப்படிப்பட்ட இடம் இருக்கவேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு வருகிறோம். ரேவதி மாதிரியான மூத்த நடிகைகள் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் நடக்கும் வரை அம்மா சங்கத்துக்கும் எங்கள் அமைப்புக்கும் நல்ல உறவு தான் இருந்தது. இப்போது அவர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நாங்கள் அடுத்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். #ActressAbductionCase #Dileep #AMMA
    மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் வெளியேறியுள்ளனர். #NadigarSangam #Amma
    கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

    இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகள் சங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.



    கேரளாவில் சினிமாவில் பெண்கள் கூட்டாளி என்ற அமைப்பு சில நடிகைகளால் நடத்தபட்டு வருகிறது. அதில் அவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அமைப்பு அதிராக பூர்வ பேஸ்புக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
    மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லால் பொறுப்பேற்றுக் கொண்டார், அத்துடன் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். #AMMA #Mohanlal
    கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் எம்.பி. இருந்துவந்தார்.

    இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்னசென்ட் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடிகர் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக இடைவேளை பாபு, துணைச் செயலாளராக நடிகர் சித்திக், பொருளாளராக ஜெகதீஷ் உள்பட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் சங்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர். 



    பிரபல மலையாள நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்துவந்தார். கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்பட்டார்.

    தற்போது கொச்சியில் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் திலீப் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. நடிகர் சங்க விதிகளுக்கு மாறாக நடிகர் திலீப் நீக்கப்பட்டதாக கூறி அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். #AMMA #Mohanlal

    ×