search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rima Kallingal"

    மலையாள திரையுலகில் பிரபலமாக இருக்கும் மஞ்சு வாரியரை ரசிகர்கள் விமர்சித்ததற்கு நடிகை ரீமா கல்லிங்கல் ஆதரவு கொடுத்துள்ளார். #RimaKallingal #ManjuWarrier
    தமிழ், மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு கோஷ்டி பிரச்சினை கொடுத்து வருகிறது. மலையாள சினிமாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் மீது அங்குள்ள நடிகைகள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    திலீப்புக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மஞ்சுவாரியர் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ‘ஓடியன்’ மலையாள படத்தில் நடித்தார். இப்படம் சில வாரங்களுக்கு முன்னர் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

    படம் வெற்றி பெறாததற்கு காரணம் மஞ்சுவாரியர் அப்படத்தில் நடித்திருந்ததுதான் என சமூக வலைதளங்களில் மோகன்லால் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தை கண்டு மஞ்சுவாரியரின் தோழியும் நடிகையுமான ரீமா கல்லிங்கல் கோபம் அடைந்தார். அவர் மஞ்சுவாரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.



    இதுபற்றி அவர் கூறும்போது, ‘இந்த படம் ஹிட் ஆகியிருந்தால் அதன் வெற்றிக்கு காரணம் மஞ்சுவாரியர் என்று யாரும் சொல்லியிருக்கப்போவதில்லை என்பது உறுதி. அப்படியிருக்கும்போது தோல்விக்கு மட்டும் மஞ்சுவாரியர் மீது வீண் பழிபோடுவது ஏன்?’ என கேட்டு இருக்கிறார் ரீமா. இவர் தமிழில் பரத்துக்கு ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தவர்.
    மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் வெளியேறியுள்ளனர். #NadigarSangam #Amma
    கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

    இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகள் சங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.



    கேரளாவில் சினிமாவில் பெண்கள் கூட்டாளி என்ற அமைப்பு சில நடிகைகளால் நடத்தபட்டு வருகிறது. அதில் அவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அமைப்பு அதிராக பூர்வ பேஸ்புக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
    மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரீமா கல்லிங்கல், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.
    மலையாளத்தில் துணிச்சலான வேடங்களில் நடித்து பெயர் எடுத்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் நடிக்கா விட்டாலும் கூட ஏற்கும் கதாபாத்திரங்களால் தென் இந்திய ரசிகர்களுக்கு ரீமா பரிச்சயம் தான்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரீமா தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டு குவிவதால் ரீமாவுக்கும் அதே போல் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. 

    அப்படி நடிப்பதாக இருந்தால் தன்னுடைய தேர்வு ஜெயலலிதா தான் என்று கூறி இருக்கிறார். ஜெயலலிதா இறப்புக்கு பின் அவரது வாழ்க்கையை படமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா முக சாயல் கொண்ட நடிகை கிடைக்காமல் அந்த முயற்சிகள் நிற்கின்றன.
    ×