search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    திலீப் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல்
    X

    திலீப் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல்

    திலீப் விவகாரத்தால் ஏற்பட்ட எரிச்சலால் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக நடிகர் மோகன்லால் கூறி வருவதாக கூறப்படுகிறது. #Mohanlal #Dileep
    கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நடந்ததும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டார். தற்போது மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் பொறுப்பேற்றதும் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகினர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகை, தனது புகார் குறித்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து கேள்விகள் எழுப்பியது.

    இந்நிலையில் மோகன்லால் நடிகர் சங்க நிர்வாகிகள் இடைவேளை பாபு உள்பட சிலரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை என்றால், ஏன் பயப்பட வேண்டும்? எல்லா வி‌ஷயத்திலும் தேவையில்லாமல் ஏன் மூக்கை நுழைக்கிறார்? இதனால் நடிகர்களுக்கு சமூகத்தில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது.



    இதே நிலை நீடித்தால் நான் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன். ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

    மோகன்லாலின் திடீர் ஆவேசத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனு முதல்-மந்திரியின் கவனத்திற்குச் செல்லாமல் தடுக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

    நடிகை பலாத்கார வழக்கில் தனிகோர்ட்டு அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று மலையாள நடிகர் சங்கம் சில நாட்களுக்கு முன்பு முடிவு செய்தது. இது தொடர்பாக கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு முதல்-மந்திரி பார்வைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த தகவல் திலீப்பிற்கு தெரிய வந்ததாகவும், அவர் இடையில் தலையிட்டு இந்த மனு முதல்-மந்திரி அலுவலகத்திற்கு செல்லாமல் தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் மோகன் லாலுக்கு தெரியவந்ததால் தான் அவர் எரிச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. #Mohanlal #Dileep #AMMA

    Next Story
    ×