பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட YSR பிரமுகர்

வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.
பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட YSR பிரமுகர்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

அவரது வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.

இது ஒருபுறம் இருக்க பிதாபுரம் தொகுதியின் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் முத்ரகடா பத்மநாபம் என்பவர் தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்றால் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்வேன் என சவால் விட்டார்.

தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் முத்தரகடா பத்மநாபம் தன்னுடைய பெயரை முத்ர கடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொண்டார். இந்த பெயரை அரசிதழ் மூலமாக மாற்றியதை அவர் உறுதி செய்தார்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com