என் மலர்

  நீங்கள் தேடியது "Jana Sena"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் காஜீவாக்கா, பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். #PawanKalyan
  அமராவதி:

  பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

  ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

  இந்த நிலையில் ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜீவாக்கா, மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

  விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது இது அறிவிக்கப்பட்டது.

  பவன் கல்யாண் எந்த தேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கங்காதரம் தெரிவித்து உள்ளார்.  பவன் கல்யாண் கடந்த 2014 தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது அவர் இந்த இரு கட்சிகளையும் எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PawanKalyan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
  லக்னோ:

  பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

  இதுதொடர்பாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என குறிப்பிட்டார்.  இதேபோல், ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். நம் நாட்டிற்கு சகோதரி மாயாவதிஜி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் ஆந்திராவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வேணுகோபால ராவ் இன்று இணைந்துள்ளார்.
  அமராவதி:

  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள பவன் கல்யாண் ‘ஜனசேனா’ என்ற கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். படங்களில் கவனம் செலுத்தி வருவதால் கட்சி பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால், கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பவன் கல்யாண் ஈடுபட்டுள்ளார்.

  இதன் ஒரு பகுதியாக, சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களை தனது கட்சியில் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வேணுகோபால ராவ் இன்று ஜனசக்தி கட்சியில் தன்னை இணைத்துள்ளார்.

  2005-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடர்களிலும் பல்வேறு அணி சார்பில் அவர் களமிறங்கியுள்ளார். 
  ×