பவன் கல்யாண் Time Begins - OG படக்குழு வெளியிட்ட போஸ்டர்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பவன் கல்யாண் Time Begins - OG படக்குழு வெளியிட்ட போஸ்டர்
Published on

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஆந்திராவில் ஜன சேனா கட்சியை தொடங்கியவர் நடிகர் பவன் கல்யாண், இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போடியிட்டார். அதே தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பாக வங்கா கீதா விஸ்வனாதம் போட்டியிட்டார்.

தற்போதைய நிலையில் பவன் கல்யாண் 80,161 வாக்குகளை பெற்றுள்ளார். வாங்கா கீதாவை விட 44,790 வாக்கு வித்தியாச்சத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இதை கொண்டாடும் வகையில் பவன் கல்யாண் தற்பொழுது நடிக்கவிருக்கும் தே கால் ஹிம் ஓஜி (They Call Him OG) திரைப்படம் சார்பாக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நெருப்பு பற்றி எரியும் சாரில் பவன் கல்யாண் மிக ஸ்டைலாக உட்கார்ந்து இருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com