search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - ஆந்திரா, தெலுங்கானாவில் பகுஜன் சமாஜ், ஜன சேனா கூட்டணி
    X

    பாராளுமன்ற தேர்தல் - ஆந்திரா, தெலுங்கானாவில் பகுஜன் சமாஜ், ஜன சேனா கூட்டணி

    பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதுதொடர்பாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என குறிப்பிட்டார்.



    இதேபோல், ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். நம் நாட்டிற்கு சகோதரி மாயாவதிஜி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    Next Story
    ×